பிரபா கணேஷன் Says : பல லட்சம் மியன்மார் அகதிகளை நாட்டில் குடியேற்றி முஸ்லிம்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க முஸ்லிம் அமைச்சர்கள் செயல்படுகிறார்கள்…!!! நாட்டிற்கே இவர்கள் ஆபத்தாம்

· · 585 Views
ரோஹிங்யா அகதிகள் ஐ.நாவில் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் தஞ்சமடைந்து கல்கிஸ்சை பகுதியில் தங்கவைத்து  அவர்களை முஸ்லிம் அமைப்புகள் பராமரித்து வருவது இலங்கையில் மென்மேலும் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கும். இது இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது,
ஏற்கனவே எமது நாட்டிற்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனமுறுகல்கள் இவ் அகதிகளின் வருகையினால் மென்மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கின்றது. மனிதாபிமான முறையில் இவர்களை பாதுகாப்பது என்பது சிறந்த விடயமாகும். இருப்பினும் எமது நாட்டில் நிலப்பரப்புகளை ஒப்படும் பொழுது சனத்தொகை செரிவு அதிகமாகNவு உள்ளது. இதற்கு அப்பால் இவர்களை எமது நாட்டிற்குள் தஞ்சமடைய வைத்து செயல்படுத்துவதின் ஊடான முஸ்லிம் சமூகத்திற்கே அதி கூடிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
இவர்களுக்கு தஞ்சமடைய இடம் கொடுப்பதன் மூலமாக இன்னும் பல இலட்ச அகதிகள் இந்நாட்டிற்கு உட்பிரவேசிக்க கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. இதன் ஊடாக முஸ்லிம் மக்களின் விகிதாசாரத்தை அதிகரித்து அரசியல் இலாபம் தேடிக் கொள்ள இன்றைய முஸ்லிம் அமைச்சர்கள் செயல்பட்டு வருகின்றார்கள்.  இது கண்டனத்துக்குரிய விடயமாகும்.
இன்று இவர்களுக்காக குரல் எழுப்பும் சிறுபான்மை அரசியல் தலைவர்களும் ஓரிரு பெரும்பான்மை அரசியல் தலைவர்களும் இவ்விடயத்தினால் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை பற்றி கருதுவதில்லை. இதனை நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களாகிய முஸ்லிம் மக்களுக்கு அவர்களுக்கான உரிமையினை முஸ்லிம் தலைவர்களால் பெற்றுக் கொடுக்க முடியாதுள்ளது. அதற்கு அப்பாற் சென்று இவ் அகதிகளின் ஊடாக பல இலட்சம் அகதிகளை இந்நாட்டிற்குள் கொண்டு வந்து முஸ்லிம்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வேலைதிட்டத்தினையே இவர்கள் செய்கின்றார்கள்.
எது எவ்வாறாயினும் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் பேசும் மக்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் சிங்கள மொழி அறியாத முஸ்லிம் அகதிகளின் வருகையின் ஊடாக முஸ்லிம் மக்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க முயல்வது கண்டனத்துக்குரியது. இவ் அகதிகளின் ஊடாக நாட்டிற்குள் ஐ.எஸ்எஸ்.ஐ தீவிரவாதிகள் உட்பிரவேசிப்பார்களாயின் நாட்டின் அமைதி கேள்விக்குறியாகி விடும். இன்றைய அரசாங்கம் இவர்கள் நாட்டில் தஞ்சம் அடைந்ததோ அல்லது ஐ.நாவின் ஊடாக கல்கிஸ்சை பகுதியில் குடியிருப்பதோ முஸ்லிம் அமைப்புகள் ஊடாக இவர்கள் பாராமரிக்கப்பட்டு வருவதோ பற்றி மூச்சு விடவில்லை.
பௌத்த பிக்குகளின் ஆர்ப்பாட்டத்தின் ஊடாகவே நாட்டு மக்களுக்கு இது பற்றி தெரிந்துள்ளது. இது இந்த ரணில் அரசாங்கத்தின் கையாளாகாத்தனத்தை வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு எதிர்காலத்தில் மேலும் அகதிகள் தஞ்சமடைவார்களாயின் இலங்கையிலுள்ள தமிழ் அமைப்புகள் தமிழ் நாட்டிலிருந்து தமிழர்களை நாட்டிற்குள் கொண்டு வர தயங்கமாட்டார்கள்.
ஆகவே இவ் அகதிகளுக்கான மனிதாபிமாக குரல் எழுப்புவர்கள் அரசியல் இலாபங்களை மறந்து நாட்டின் இறைமையைப் பற்றி சிந்திக்க வேண்டும். வெறுமனே ஊடக அறிக்கையின் ஊடாக தம்மை மனித உரிமை காவலர்கள் என்று காட்டிக் கொள்வதை தவிர்த்து நியாயமாக சிந்திக்க வேண்டும். நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு முஸ்லிம் தலைவர்கள் செயல்பட வேண்டும்.

2 comments

  1. “இன்று இவர்களுக்காக குரல் எழுப்பும் சிறுபான்மை அரசியல் தலைவர்களும் ஓரிரு பெரும்பான்மை அரசியல் தலைவர்களும் இவ்விடயத்தினால் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை பற்றி கருதுவதில்லை” Yah man, your’e right.

    “இன்று நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களாகிய முஸ்லிம் மக்களுக்கு அவர்களுக்கான உரிமையினை முஸ்லிம் தலைவர்களால் பெற்றுக் கொடுக்க முடியாதுள்ளது. “, your’e damn right man. Can you be our leader?, but there is a problem, you have do undergo a small operation and you’ll uncomfortable for few days. It’s Ok , isn’t it.
    “நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு முஸ்லிம் தலைவர்கள் செயல்பட வேண்டும்.” Your’e speaking sense man, terrific! By the way are you in good talking terms with you brother Mano. First concentrate on how to reunite with your own brother then you can advise others, Ok Mr. Prabha

Leave a Reply

Your email address will not be published.