பிரதமர் ரணில் மீது தாக்குதல்..பாராளுமன்றில் பெரும் குழப்படி

· · 930 Views

பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 

 

இதன் காரணமாக பாராளுமன்றில் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதற்ற நிலைமை மோதலாக மாறி ஒருவருக்கு ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

ஆளும் கட்சியினர் மற்றும் கூட்டு எதிர்கட்சியினருக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் போது இருதரப்பு உறுப்பினர்களும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

இரு உறுப்பினர்கள் மீது துரத்தித் துரத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாரு யாரு திருடன்.. ரணில் திருடன் என கூச்சலிட்டு துரத்தும் போது யாரு திருடன் யாரு திருடன்.. மஹிந்த திருடன் என ஆளும் கட்சியினர் கூச்சலிட்டுள்ளனர்.

 

 

 

எதிர்க்கட்சியினர் ரணில் திருடன் என கோஷமிட்டுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றி கொண்டிருக்கும் போது அவரை நோக்கி ஏதோ பொருள் வீசப்பட்டதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்  இதனால் 10 நிமிடங்களுக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.