பிரதமருக்கு தகவல் வழங்கினார் !! தனது செயலாளர் ஒகஸ்டின் மீது ஜனாதிபதி மைத்திரி கடும் ஆத்திரத்தில்

· · 895 Views

கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுப் பதவிகளுக்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை.

 

இலங்கை மத்திய வங்கி பிரதமர் ரணில் விக்ரசிங்கவின் அதிகாரத்தில் இருந்து மீண்டும் நிதியமைச்சிற்குள் கொண்டுவருவதற்கான தேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இருக்கிறது. இதுவே குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

மத்திய வங்கியை பிரதமரின் கீழ் இருந்து மீட்டு நிதியமைச்சின் கீழ் கொண்டுவருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிற்கு இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அறிவித்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை. என்ன காரணத்திற்காக இது வெளியிடப்படவில்லை என்பது குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை.

 

 

எனினும், ஜனாதிபதியின் கையெழுத்தின்மையே இந்த தாமதத்திற்குக் காரணம் என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து ஜனாதிபதி குறித்த ஆவணங்களில் கையெழுத்திட்டு, செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

 

இதனால் குழப்பமடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 26ஆம் திகதி இரவு மலிக் சமரவிக்ரவுடன் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றுள்ளார். மத்திய வங்கியை தனக்குக் கீழ் இருந்து அகற்றுவதற்கான காரணத்தைக் கேட்டறியவே இவர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜனாதிபதியிடம், பிரதமர் நேரடியாக கேட்டுள்ளார். இதன் பலனாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் மத்திய வங்கியை நிதியமைச்சின் கீழ் கொண்டுவரும் வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும், இது தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தினால் ஜனாதிபதி மிகவும் ஆத்திரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

வர்த்தமானியை வெளியிடுவதற்குப் பதிலாக பிரதமருக்கு இதுகுறித்து தொலைபேசியில் அறிவித்த ஜனாதிபதியின் செயலாளர் மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

ஒஸ்டின் பெர்னாண்டோ 2001 – 2014ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றியிருந்தார். ஜனாதிபதியின் செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்படும் போது அவர் ஒரு ஐ.தே.க. ஆதரவாளர் என்பதை ஜனாதிபதி மறந்துவிட்டால் போலும்.

Leave a Reply

Your email address will not be published.