பின் வாசல் : அலி சப்ரி ரஹீம் , ஜமீனா இல்யாஸ் , நிஸ்தார் – UC க்குள் செல்லவிருக்கும் A.C.M.C. காரர்கள்

· · 1265 Views

“தான் உற்பட  ஜமீனா இல்யாஸ் , நிஸ்தார் ஆகியோர்  தற்போதைய நிலையில் பட்டியல் ஊடாக நகர சபைக்குள் பிரவேசிக்க உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட , நகர சபைத் தேர்தலில் முக்கிய  போட்டியாளருமாகிய ஜனாப்இ. அலி சபரி ரஹீம்ன்ஷா தெரிவித்தார்.

 

 

 

அல்லாஹ்வின்  உதவியால்  நான்  சபைக்கு செல்வது உறுதி. எனக்கு தெரிந்தவரையில்  என்னுடன் சேர்ந்து வை .எம். நிஸ்தாத்  மற்றும் ஜமீனா இல்யாஸ் கமர்தீன் ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவாக சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

 

 

 

” நான் தோற்றுப் போனதை ஏற்றுக் கொள்கின்றேன். எனக்கு  வாக்களித்த மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். போட்டிகளில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் சகஜம். என்றாலும் நான் தற்போது செய்து வரும் எந்த சேவைகளையும் இடை நிறுத்தப் போவதில்லை. அவைகள் தொடர்ந்து இடம் பெரும் என்றும் அவர் கூறினார்.

 

 

நகர சபைத் தலைவர் போட்டியில் இருக்கின்றீர்களா என்று கேட்ட பொது,

 

ஆமாம் நானும் இருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பாருங்கள். அல்லாஹ் நாடினால் நிச்சயம் கிடைக்கும். எனது தலைமையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

 

 

 

நடந்து முடிந்த  உள்ளூர்  ஆட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் கட்சியின் பிரதான வேட்பாளராக களம் இறங்கிய ஜனாப். சப்ரி, எதிர்ப்பாராவிதமாக முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

One comment

Leave a Reply

Your email address will not be published.