மன்னார் and கொம்பனி : 74/= அரிசியை 25 கிலோ வாங்கினால் 73/= ரூபாய் – அமைச்சர் ரிஷாதின் ஒருவாய் தள்ளுபடி

· · 350 Views

25 கிலோகிராமுக்கு அதிகமான அரிசியைக் கொள்வனவு செய்பவருக்கு, ஒரு கிலோகிராம் அரிசியை 73 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

இத்துடன், இந்தியாவில் இருந்து கடந்த இரண்டு மாத காலத்துக்குள், 1,300 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

இது தொடர்பில், அமைச்சு இன்று (06) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

 

 

“வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்துக்கு அமைவாக, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில், ஞாயிற்றுக்கிழமை (05) வரை, 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி, இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அத்தொகை முழுவதும், சந்தைக்கு விநியோகத்துக்கென அனுப்பப்பட்டுள்ளது.

 

 

 

“இந்த நாட்டரிசியானது, கிலோகிராம் 74 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. 25 கிலோகிராமுக்கு மேற்பட்ட அரிசியைக் கொள்வனவு செய்பவருக்கு ஒரு கிலோகிராம் 73 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.