பால் மா, கேஸ், சீனி,கிழங்கு, நெத்தலி விலைகளைக் குறைத்தார் ரவி..!! நுகர்வோருக்கு கொண்டாட்டம்

· · 1941 Views

புத்தாண்டு ஆரம்பிதுள்ள நிலையில் இன்றைய தினம் பொருட்களின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

lanka-sathosa-prices-reduced

இதற்கமைய, புதிய வரவு செலவுத் திட்டத்தில், விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்காக வரி குறைக்கப்பட்டுள்ளது.

வருமான வரியின் சதவீதம் திருத்தப்பட்டுள்ளது.

வீட்டுப் பாவனை எரிவாயு விலை 25 ரூபாவால் குறைவடைகிறது.

மண்ணெண்ணை லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைவடைகிறது.

வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைவடைகிறது.

நெத்தலி கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைவடைகிறது.

உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைவடைகிறது.

பருப்பு கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைவடைவதுடன், பயறு 15 ரூபாவால் குறைவடைகிறமை குறிப்பிடத்தக்கது.

பட்ஜட்டின் 362 பிரேரணைகளும் இன்று முதல் அமுல் – நிதி அமைச்சர்!

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்பட்ட 362 பிரேரணைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படவு ள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பயனடையும் வகையில், விரைவாக இந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமுல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து அமைச்சுக்களின் செயலாளர்களை வரவழைத்து தெளிவூட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான செயற்றிட்ட ங்கள் என்பன இன்றுமுதல் அமுல்படுத்தப்படவுள்ளன.

அனைத்து செயற்பாடுகளும் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும். என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.