பாகிஸ்தான் ஒரு தலைக் காதலர் தினம் : தன்னை மணமுடிக்க மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த காதலன் !!

· · 168 Views

noss

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த 19 வயது பெண்ணின் மூக்கை இளைஞன் ஒருவர் துண்டித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,

பஹவல்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவரின் மகளை திருமணம் செய்துகொள்ள, அதே பகுதியைச் சேர்ந்த நதீம் என்ற இளைஞர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பஷீர் மறுப்பு தெரிவித்ததால், நதீம் தனது தந்தை மற்றும் இரண்டு கூட்டாளிகளுடன் வியாழக்கிழமை பஷீரின் வீட்டிற்குள் நுழைந்து அவர்களைத் தாக்கினார். அதோடு அவரது மகளின் மூக்கைத் துண்டித்தார்.

நதீம் பஷீரின் மகளின் மூக்கை அறுத்து, ‘என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த நீ இனி வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ள முடியாது’ என்று சத்தம் போட்டுவிட்டு சென்றுள்ளார்.

நதீம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.