பஸ் ஸ்ட்ரைக் பண்ணியவர்களைக் கூப்பிட்டு கதைத்தார் எளிமையான ஜனாதிபதி..!!போராட்டம் வாபஸ்

· · 1307 Views

இலங்கை அரசியல் வரலாற்றில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனித்துவமான ஒருவராக மக்களால் பார்க்கப்படுகின்றார்.

பல்வேறு ஜனாதிபதிகள் இலங்கையின் ஆட்சிப்பீடத்தில் ஏறிய போதும் முன்னாள் அமைச்சர் ரணசிங்க பிரேமதாஸவுக்கு அடுத்தபடியாக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிக கரிசனை கொண்டவராக சமகால ஜனாதிபதி காணப்படுகிறார்.

%e0%ae%ae%e0%af%88

மிகவும் எளிமையான ஜனாதிபதி என சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுள்ள மைத்திரி, நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலும் அதிக ஆர்வம் காட்டுவதாக அண்மைய நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

நேற்று முன்தினம் நாடு தழுவிய ரீதியாக தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாட்டு மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பணியில் ஈடுபட்ட போதும், அது நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கவில்லை.

இதன் காரணமாக அரச மற்றும் தனியார் ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமப்பட்டனர்.

பல்வேறு நகரங்களில் பல மணி நேரங்கள் பஸ்களுக்காக மக்கள் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.

பணி பகிஸ்கரிப்பு போராட்டத்த உடனடியாக கைவிடுமாறு பிரதமர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கோரிக்கை விடுத்த போதும், அது பலனளிக்கவில்லை.

எனினும் மக்களின் அவல நிலையை உணர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போராட்டத்தை உடனடியாக கைவிடுமாறும் பேச்சுவார்த்தை நடத்த வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், நேற்று காலை ஜனாதிபதியை சந்திந்திருந்தனர்.

இதன்போது ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, பணி பகிஸ்கரிப்பு போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு நாள் முழுமையாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சாரதிகள் அடுத்த நாள் வழமை போன்று பணிகளை முன்னெடுத்தமையால், நாட்டு மக்களின் போக்குவரத்து நெருக்கடியும் சுமூக நிலைக்கு வந்தது.

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக சாரதிகளால் இழைக்கப்படும் குற்றத்திற்கான தண்டப்பணத்தை 25000 ரூபாவாக அதிகரிப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாதென பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் இந்த விவகாரம் குறித்து ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்திருந்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக தலையீடு செய்யாமல் இருந்திருந்தால், பணி பகிஸ்கரிப்பு போராட்டம் பல நாட்களுக்கு நீடித்திருக்கும்.

இந்நிலையில் ஜனாதிபதியின் துரித நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவொரு தரப்பினரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதுவும் பிரச்சினை இருப்பின் துறைசார் அமைச்சருடன் பேசி தீர்வு காணுமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தனது ஆட்சிக்காலத்தில் வறிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்திருந்தார். அத்துடன் மக்களுடன் நெருக்கமாக செயற்பட்ட ஒருவராகும்.

Leave a Reply

Your email address will not be published.