பழைய மனாப்பை முறையில் மாகாண சபைத் தேர்தல் !! அரசாங்கம் அறிவிப்பு

· · 1074 Views

மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

புதிய முறையில் தேர்தலை நடத்ததுவதற்கு ஏற்கனவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஏற்பட்ட சிக்கல் நிலைமைகளை கருத்திற் கொண்டு பழைய முறையில் நடத்துவதற்கு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

இது தொடர்பாக நேற்றைய தினம் நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

 

எதிர்வரும் 10ஆம் திகதி இது தொடர்பிலான அடுத்த கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.