” பள்ளிவாசல் காணி விடயத்தில் தம்புள்ளை முஸ்லிம்கள் தவறிழைத்தனர்..!! பெஷில் குற்றச்சாட்டு – பள்ளிவாசல் அமைத்துத் தருவதாக கூறியதை பொறுப்பாளர்கள் நிராகரித்தனராம்

· · 571 Views
தம்புள்ளை பள்ளிவாயலுக்கு நகரத்தின் மத்தியில் காணியை மட்டுமல்ல பள்ளியையும் கட்டித்தர அரசாங்கத்தினால் நிதியையும் வழங்குவதாக தான் கோரிக்கை முன்வைத்த போது நிராகரித்த முஸ்லீம்கள் இன்று பள்ளிவாயலுக்கு காணி தேடி ஓடித்திரிவதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.
நேற்று நெலும் மாவத்தையில் உள்ள  கூட்டு எதிரணியின் காரியாளயத்தில் இடம்பெற முஸ்லீம்களுடனான சந்திந்தில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
14680530_10154394276431311_2726054599512097637_n
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்..
தம்புள்ளை பள்ளி பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு எமது ஆட்சியில் ரிஷாத் பதியுதீன் என்னை பலதடவைகள் நிர்பந்தித்தார்.பள்ளிவாயலுக்கு நகரத்தின் மத்தியில் காணியை மட்டுமல்ல பள்ளியையும் கட்டித்தர அரசாங்க நிதியையும் வழங்குவதாக நான் அவரிடம் கூறினேன் அதனை அப்போது முஸ்லீம்கள் நிராகரித்தனர்.ஆனால் இன்று பள்ளிவாயலுக்கு காணி தேடி ஓடித்திரிகின்றர்.
அன்று எமது அரசாங்கத்தின் உள்ளே இருந்து சூழ்ச்சி செய்தவர்கள் இன்று இந்த அரசாங்கத்த்தில் உள்ளே இருந்துகொண்டு அதே வேலையை சுதந்திரமாக செய்கின்றனர்.நாம் அவர்களை இணங்கண்டுவிட்டோம் அந்த சூழ்சிகாரர்களை முஸ்லீம்கள் விரைவில் தெளிவாக இணங்கண்டுகொள்வர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.