“பத்திரங்களை வீசி எறிந்து விட்டு அமைச்சரவையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி !! மரைக்காரின் அறிக்கைகளால் ஆத்திரமுற்றார்

· · 1306 Views

இன்று (16) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மிகவும் ஆத்திரமடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைப் பத்திரங்களை வீசி எறிந்து, கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது.

 

 

 

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், தனக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும், இவற்றைத் தடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்று காலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

”திருடன் திருடன் எனக் கூறிக்கொண்டு பிற்பொக்கட் காரன் ஓடுகிறான்.” போன்ற அறிக்கைகளை வெளியிடும் போது ஜனாதிபதி இதுகுறித்து இன்னும் சிந்தித்திருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ள நிலையில், இது ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே வாய் வார்த்தைகள் வரை வளர்ந்துள்ளது.

 

 

 

இதன்போது ஆத்திரமடைந்த ஜனாதிபதி, தனது கையில் இருந்த அமைச்சரவைப் பத்திரங்களை வீசி எறிந்துவிட்டு, கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

 

 

 

 

நிலைமையை சுதாரித்துக் கொண்ட சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, ஜனாதிபதியை சாந்தப்படுத்தி, ஜனாதிபதிக்கும், ஐ.தே.க உறுப்பினர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டால் அது அரசாங்க எதிர்பாளர்களுக்கு அதிக இலாபமாக இருக்கும் எனக் கூறி, ஜனாதிபதியை மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைத்துவந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.