“பதவி விலக்குங்கள் ” அமைச்சர் ரவியை பதவி நீக்கக்கோரி அமைச்சரவையில் கடும் வாதம்

· · 444 Views

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், அமைச்சரவையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

 

 

 

 

ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில், இவ்விவகாரம் பிரதான பேசுபொருளாக அமைந்திருந்ததோடு, ரவியை பதவி விலக்குமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் அமைச்சர் ரவி சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். மிக நீண்ட நேரம் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் ரவி, அமைச்சரவை கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

 

 

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸூடன் அமைச்சர் ரவி வர்த்தக ரீதியான தொடர்புகளை பேணி, பல வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

 

இதனையடுத்து அமைச்சர் ரவியிடம், முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியதோடு, ஒன்றிணைந்த எதிரணியால் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

 

தற்போதைய நாடாளுமன்ற அமர்விலும் இப்பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இன்று அல்லது நாளை முக்கிய தீர்மானம் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.