பங்களாதேஷ் வீரர்களின் நடத்தை குறித்து அறிக்கை கேட்கிறார் மத்தியஸ்தர் கிரிஸ் ப்ரோட்..!! இது டாக்கா அல்ல முர்தசா பாய், கொழும்பு

· · 616 Views

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (16) இடம்பெற்ற திறமைகாண் போட்டியில் ஏற்பட்ட தீவிரநிலையை அடுத்து பங்களாதேஷ் கிரிக்கட் போட்டியாளர்கள் தங்கியிருந்த ஓய்வறையின் கண்ணாடி சுவர்கள் உடைக்கப்பட்டுள்ளன.

 

 

அந்த தருணத்தில் என்ன நிகழ்ந்தது என சி.சி.ரி.வி காட்சிகளை அவதானித்து தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மத்தியஸ்தராக பணியாற்றிய இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கர் வீரர் கிரிஸ் ப்ரோட், ஆர்.பிரேமதாச மைதான பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்வடுத்துள்ளார்.

 

 

கிரி்க்கட் போட்டியின் இறுதி ஓவரில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பங்களாதேஸ் கிரிக்கட் போட்டியாளர்கள் மைதானத்திற்கு மத்தியில் சென்று கோஷமெழுப்பினர்.

 

Image result for Bangladesh vs srilanka keththarama stadium match

 

 

அதன்பின்னரும் தொடர்ந்து கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் மைதானத்தின் ஓய்வறை கண்ணாடி சுவர்கள் உடைக்கப்பட்டதா அல்லது போட்டியில் வெற்றிபெற்றதன் காரணமாக போட்டியாளர்கள் வெற்றிக்களிப்பில் ஈடுபட்டபோது கண்ணாடிகள் தற்செயலாக உடைந்ததா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

 

கிரிக்கட் மைதான அதிகாரிகளின் அறிக்கை இன்று ஒப்படைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Image result for Bangladesh vs srilanka keththarama stadium match

 

 

பங்களாதேஷ் அணி வெற்றிக்காக போட்டியின் இறுதி இரண்டு ஓவர்களில் 23 ஓட்டங்களை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

 

திஸர பெரேராவினால் வீசப்பட்ட 19 ஆவது ஓவரில் 11 ஓட்டங்களை பெற்ற பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டக்காரர்கள் இறுதி ஒவரில் 12 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் இருந்தனர்.

 

Image result for Bangladesh vs srilanka keththarama stadium confront

 

இறுதி ஓவரில் இசுரு உதான வீசிய முதல் பந்துக்கு ஒரு ஓட்டம் பெறப்பட்ட நிலையில், இரண்டாவது பந்தின் போது ரெஹமான் ஓடும் போது ஆட்டமிழந்தார்.

 

 

எனினும், ரெஹமான் ஆட்டமிழப்பதற்கு முன்னர் வீசப்பட்ட பந்து வீச்சு இடுப்புக்கு மேலாக சென்ற முறையற்ற பந்து என தெரிவித்து போட்டியாளர்கள் கிரிக்கட் மைதானத்திற்குள் நுழைந்து கலவரப்படுத்தினர்.

 

 

இதன்போது இரண்டு அணி வீரர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

 

 

இந்த விடயமே, பிரச்சினை தீவிரமடைவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.