நோன்புப் பெருநாள் பரிசு : ஞானசார தேரோ கைது என்ற நாடகத்தை எப்படி அரங்கேற்றினர் பொலிசார்..? அவரை விடுவிப்பதில் கண்ணும் கருத்தமாக இருந்த நல்லாட்சிப் பொலீசார்

· · 992 Views

பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக கோட்டை நீதிவான் நீதி­மன்­றினால் விடுக்­கப்­பட்ட பிடி­யாணை நேற்று அவர் அங்கு சர­ண­டைந்­ததைத் தொடர்ந்து மீளப்­பெ­றப்­பட்டு பிணை வழங்­கப்­பட்­டது.

 

அத்­துடன் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரி­வினால் புதுக்­க­டையில் உள்ள கொழும்பு பிர­தான நீதிவான் , 4 ஆம் இலக்க மேல­திக நீதிவான் நீதி­மன்றம் ஆகி­ய­வற்றில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­குகள் தொடர்பில் ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட்டு ஆஜர் செய்­யப்­பட்ட நிலையில் அந்த நீதி­மன்­றங்­க­ளாலும் பிணையில் செல்ல அவ­ருக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

 

நேற்று முற்­பகல் வேளை­யிலும் பிற்­ப­க­லிலும் இச் சம்­ப­வங்கள் அந்­தந்த நீதி­மன்­றங்­களில் இடம்­பெற்­றன.

 

 

கோட்டை நீதி­மன்றில் சர­ண­டைந்த ஞான­சாரர்:
முஸ்­லிம்­களின் புனித வேத­நூ­லான அல்­குர்­ஆனை அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டமை, ஜாதி­க­பல சேனாவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினுள் அத்­து­மீறி கலகம் விளை­வித்­தமை தொடர்பில் கோட்டை நீதி­மன்றில் இடம்­பெற்று வரும் வழக்கில் ஆஜ­ரா­காத பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாகக் கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கோட்டை நீதி­மன்றம் கடந்த 15 ஆம் திகதி  உத்­த­ரவு பிறப்­பித்திருந்தது. 770/14, 758/14 ஆகிய வழக்­கெண்­களைக் கொண்ட இரு வழக்­குகள் தொடர்­பி­லேயே கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன  இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்தார். அதன்­படி ஞான­சார தேரரைக் கைது செய்ய இரு வழக்­குகள் தொடர்­பிலும் தலா ஒவ்­வொரு பிடி­யாணை வீதம் இரு பிடி­யா­ணைகள் பிறப்­பிக்­கப்­பட்­டன.

 

2014.04.09 ஆம் திகதி கொம்­பனி வீதி நிப்பொன் ஹோட்­டலில் நடை­பெற்ற ஜாதி­க­பல சேனாவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினுள் அத்து மீறி, அதனைக் குழப்­பி­யமை, திட்­ட­மிட்ட அத்து மீறல் மற்றும் தாக்­குதல் உள்­ளிட்ட 8 குற்­றச்­சாட்­டுகள் ஞான­சார தேர­ருக்கும் மேலும் 6 சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்­ளன.

 

இதனை விட 2014.04.12 அன்று கொம்­பனி வீதி பொலிஸ் நிலை­யத்­துக்கு முன்­பாக ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இஸ்­லாத்­தையும் குர்­ஆ­னையும் அவ­ம­திக்கும் வித­மா­கவும் நிந்­திக்கும் வித­மா­கவும் கருத்­துக்­களை வெளி­யிட்­டமை தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மட்டும் பிறி­தொரு வழக்கும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

 
இந்த இரு வழக்­கு­க­ளிலும் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட நிலையில், நேற்­றுக்­காலை 10.18 மணிக்கு கல­கொட அத்தே ஞான­சார தேரர் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் சர­ண­டைந்தார். கல­கொட அத்தே ஞான­சார தேரர் அங்கு சர­ண­டையும் போது சுமார் நூற்­றுக்கும் அதி­க­மான தேரர்கள் நீதி­மன்ற வளா­கத்தில் ஒன்று கூடி­யி­ருந்­தனர்.

 

இந் நிலையில் சட்­டத்­த­ரணி சுதர்­ஷனீ குண­ரத்­னவின் இடை­யீட்டு மனு­வுக்கு அமைய ஞான­சார தேரரின் விவ­கா­ரத்தை கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்டார்.

 

இதன் போது ஞான­சார தேரர் சார்பில் மன்றில் முன்­னி­லை­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வல­லி­யத்த, உயிர் அச்­சு­றுத்தல் கார­ண­மாக ஞான­சார தேரர் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை எனவும் உரிய தவ­ணையில் ஆஜ­ரா­காமை தொடர்பில் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள பிடி­யா­ணையை மீளப்­பெ­று­மாறும் நீதி­மன்றை கோரினார்.

 

இந் நிலையில் இரு வழக்கு தொடர்­பி­லான முன்­னைய ஆவ­ணங்­களை பரி­சீ­லனை செய்த கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன, ஒரு வழக்கில் இது­வரை ஞான­சார தேரர் தவ­றாது மன்றில் ஆஜ­ரா­கி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினார். மற்­றைய வழக்கில் ஒரு தவ­ணை­யி­லேயே மன்றில் ஆஜ­ராக தவ­றி­யுள்­ள­தா­கவும் அந்த வழக்கில் மறு­நாளே அவர் ஆஜ­ராகி ஆஜ­ரா­க­ாமைக்­கான கார­ணத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். இந்த நிலை­மையை அவ­தா­னத்தில் கொண்டு குறித்த இரு வழக்­கு­க­ளிலும் ஞான­சார தேர­ருக்கு ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டி­ருந்த பிணை நிபந்­த­னை­களின் அடிப்­ப­டை­யி­லேயே செல்ல நீதிவான் லங்கா ஜய­ரத்ன அனு­ம­தி­ய­ளித்தார்.

 

அத்­துடன் அவ்­விரு வழக்­கு­க­ளிலும் விதிக்­கப்­பட்ட பிடி­யா­ணையை மீளப்­பெற்ற நீதிவான் வழக்கின் தவ­ணை­களில் தவ­றாது ஆஜ­ரா­கவும் ஞான­சார தேர­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்து வழக்கை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தார்.

 

 

ஓ.சி.பி.டி. யில் முன்­னி­லை­யான ஞான­சார தேரர்:
கோட்டை நீதி­மன்றில் பிணை­பெற்ற பின்னர் ஞான­சார தேரர் நேராக புறக்­கோட்டை மிஹிந்து மாவத்­தையில் உள்ள ஓ.சி.பி.டி. எனப்­படும் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரி­வுக்கு வாக்­கு­மூலம் அளிக்கச் சென்றார். இதன் போது அங்கு ஞான­சார தேரரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­திய பொலிஸார் அவரை இரு வழக்­குகள் தொடர்பில் கைது செய்­தனர். 73854, 73465 ஆகிய இலக்­கங்­களைக் கொண்ட புதுக்­கடை 4 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றம் மற்றும் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றம் ஆகி­ய­வற்றில் உள்ள வழக்­குகள் தொடர்­பி­லேயே அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்டார்.

 

குற்றம் தொடர்­பி­லான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்­டத்­த­ரணி கமல் சில்­வாவின் கீழ் செயற்­பட்ட திட்­ட­மிட்ட குற்­றங்கள் தொடர்­பி­லான பொலிஸ் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிரி­யந்த லிய­னகே, பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜனக குமார ஆகியோர் அடங்­கிய குழு­வினர் ஞான­சார தேரரைக் கைது செய்­தனர்.

 

 

 நீதி­மன்றில் ஆஜர்:
கைது செய்­யப்­பட்ட ஞான­சார தேரர் பொலிஸார் ஊடாக புதுக்­க­டையில் அமைந்­துள்ள நீதி­மன்ற வளா­கத்­துக்கு அழைத்து வரப்­பட்டார். இதன் போதும் பெரு­ம­ள­வான பெளத்த தேரர்கள் நீதி­மன்ற வளா­கத்தில் ஒன்று கூடினர்

 

 

  மேல­திக நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்:
இவ்­வாறு நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்ட கல­கொட அத்தே ஞான­சாரர் கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார். முன்­ன­தாக ஐ.சி.சி.பி.ஆர். எனப்­படும் சர்­வ­தேச சிவில், அர­சியல் இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் விதி விதா­னங்­களின் பிர­காரம் இர­க­சிய, பாது­காக்­கப்­பட்ட பீ அறிக்கை ஒன்­றி­னூ­டாக இவ்­வ­ழக்கில் அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்த பொலிஸார் நேற்று அந்த குற்­றச்­சாட்­டு­களை இடை­யீட்டு மனு­வொன்­றி­னூ­டாக தாக்கல் செய்த மேல­திக அறிக்கை ஊடாக மாற்­றி­ய­மைத்­தனர்.

 

அதன்­படி நேற்று பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்து அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் மட்டும் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக இலங்கை தண்­டனை சட்டக் கோவையின் 140,183,186,344 ஆகிய அத்­தி­யா­யங்­களின் கீழ் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தாக நீதி­மன்றில் முன்­னி­லை­யான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

 

இத­னை­ய­டுத்து நீதி­மன்றை விழித்த மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல, ஞான­சார தேர­ருக்கு எதி­ராக முதலில் தாக்கல் செய்­யப்­பட்ட சிவில், அர­சியல் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்­டு­களை பொலிஸார் விலக்­கிக்­கொன்டு தற்­போது தண்­டனை சட்டக் கோவையின் கீழ் சில குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளனர்.

 

பிணையை மறுக்க பிணைச் சட்­டத்தின் 14 ஆவது அத்­தி­யா­யத்தில் கூறப்­பட்­டுள்ள எந்த விட­யத்­தையும் பொலிஸார் முன்­வைக்­க­வில்லை. குற்­றச்­சாட்­டு­களும் பிணை வழங்­கத்­தக்­கதே. பிணை வழங்க பொலிஸார் எந்த எதிர்ப்பும் இல்லை என்­கின்­றனர்.

 

எனவே ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சொந்தப் பிணை­யிலும் ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஒரு சரீரப் பிணை­யிலும் செல்ல ஞான­சார தேரரை அனு­ம­திக்­கிறேன் என நீதிவான் அறி­வித்து வழக்கை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.

 

 

பிர­தான நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்:
இத­னை­ய­டுத்து ஞான­சார தேரர் பொலன்­ன­று­வையில் வைத்து மத முரண்­பாட்டை தோற்­று­விக்கும் கருத்­து­களை வெளி­யிட்டார் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் 73465 எனும் வழக்கில் ஆஜர் செய்­யப்­பட்டார்.

 

இதன் போது ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 291 (அ), (ஆ) அத்­தி­யா­யங்­களின் கீழ் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் 120 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழும் விசா­ரணை இடம்­பெ­று­வ­தா­கவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

 

இத­னை­ய­டுத்து 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணைகளிலும் கலகொட அத்தே ஞானசார தேரர் செல்ல பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார அனுமதித்தார்.

 

அத்துடன் ஞானசார தேரரோ அவர் சார்ந்த பொதுபல சேனா அமைப்பினரோ வேறு இன, மதங்களைத் தூற்றும் வகையில், வெறுப்பூட்டும் வகையில் கருத்து வெளியிடுவதில் இருந்து தவிர்ந்து இருக்குமாறு கடுமையாக எச்சரித்தார்.

 

சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் அது தொடர்பில் உடனடியாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிவான் அவ்வாறு அறிக்கை கிடைத்தால் பிணை ரத்தாகும் என தெரிவித்ததுடன் வழக்கை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

 

இதனையடுத்து பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த ஞானசார தேரர் நேற்று மாலை 4.15 மணியளவில் நீதிமன்றில் இருந்து வெளியேறிச் சென்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.