நாளை முதல் பெற்றோலியம் பொருட்களுக்கு தட்டுப்பாடு ..!! கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் எரிபொரும் வழங்கப்பட மாட்டது என தொழிற்சங்க முன்னணி அறிவிப்பு

· · 620 Views

பேற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஒரு பகுதியினை விற்பனை செய்ததற்கு எதிராக நாளை (24) அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்க முன்னணி இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த பெற்றோலிய சேவை சங்கத்தின் தலைவர் அஷோக ரண்வல தெரிவித்துள்ளார். திருகோணமலை பெற்றோலிய தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவது உட்பட பல காரணங்களை முன்வைத்து பெற்றோலிய ஒன்றியம் இந்த வேலைநிறுத்த செயல்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

images

நாளை காலையில் கொலன்னாவையிலிருந்து பெற்றோலியம் வழங்கும் நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என ரண்வல சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாளைக்கு பின் அரசாங்கம் சரியான தீர்மானம் எடுக்காவிடின் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்படும் என தெரிவித்த ரண்வல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பெற்றுக் கொடுக்கப்படும் பெற்றோலியம் கூட வழங்கப்பட மாட்டாது எனவும்தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சொத்தை பாதுகாக்கும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அஷோக ரண்வல தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.