நான் பிரதமர் பதவியை கேட்கவில்லை !! தன்னடக்கத்துடன் கூறும் மஹிந்த ராஜபக்ஷ

· · 551 Views

சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த, மகிந்த அணியினர் தங்களுக்கு பிரதமர் அல்லது எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தாக கூறப்பட்டது.

 

 

ஆனால் இதனை மகிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

 

 

 

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் இருந்து சுதந்திர கட்சி விலக வேண்டும் என்ற நிபந்தனையை மாத்திரமே தாங்கள் விதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் மைத்திரி – மகிந்த கூட்டணியில் போட்டியிடுவது குறித்து தற்போது பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

 

 

 

ஐக்கிய தேசியக் கட்சியின் கை தேர்தலில் ஓங்கியிருப்பதாகல் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்னை இன்னும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதிக்கு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

 

 

 

 

எனவே, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

 

 

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகும் பட்சத்தில் மாத்திரமே கூட்டணி சாத்தியப்படும் என மகிந்த தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.