“நான் நீதியமைச்சின் இணைப்புச் செயலாளர் “என காலாவதியான அடையாள அட்டையைக் காட்டியவர் கைது – புத்தளம் பகுதியில்இருந்து வந்த வேன்காரர்

· · 979 Views

தான் நீதியமைச்சின் இணைப்புச் செயலாளர் எனக் காலாவதியான அடையாள அட்டை ஒன்றைக் காண்பித்த நபரொருவரை, தோப்பு பிரதேசத்தில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இன்று (04) அதிகாலை கைதுசெய்துள்ளனரென, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

குறித்த வீதிச் சோதனை நடவடிக்கை, வென்னப்புவ, மாரவில மற்றும் கொஸ்வத்தை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, நேற்று அதிகாலை மூன்று பொலிஸ் நிலையங்களினதும் பொலிஸ் அதிகாரிகள் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

 

 

 

 

 

இதன்போது புத்தளம் திசையிலிருந்து வந்துள்ள சொகுசு வானை நிறுத்தியுள்ள பொலிஸார், அதிலிருந்த ஆடைகள் அடங்கிய பயணப் பையொன்றை சோதனை செய்ய முற்பட்டபோது, வானிலிருந்த ஒருவர் அடையாள அட்டை ஒன்றைக் காட்டி, தான் நீதியமைச்சில் பணியாற்றும் இணைப்பதிகாரி எனப் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

 

 

அந்நபர் காட்டிய அடையாள அட்டையைச் சோதித்த போது, அது 2011ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதொன்று என்பதைத் தெரிந்து கொண்ட பொலிஸார், அந்த அடையாள அட்டை காலாவதியாகியிருந்ததையும் அந்நபர் தற்போது நீதியமைச்சில் பணியிலில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

 

 

பின்னர் அந்நபரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், அவரிடமிருந்த அடையாள அட்டையைக் கைப்பற்றி, வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 

 

இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.