நாடாளுமன்றை விளையாட்டாக நினைக்கும் அமைச்சர் ஹரீஸ் !! 5 அமர்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்

· · 183 Views

இவ்வருடம் மே மாதம் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தளவான 5 அமர்வுகளில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்து கொண்டுள்ளதாக இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதானது பிரதி அமைச்சர் ஹரீஸின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தியாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது என பிரதி அமைச்சரின் ஊடகச் செயலாளர் றியாத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.

 

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்து கொண்டு முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருவதானது யாவரினதும் கவனத்தை ஈர்த்த விடயமாகும். இதனூடாக பிரதி அமைச்சர் ஹரீஸ் மக்கள் மத்தில் தனக்கென ஒரு தனியான அடையாளத்தையும் பெற்றுள்ளார்.

 

 

 

இவ்வருடம் மே மாதம் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் பிரதி அமைச்சர் ஹரீஸ் 5 அமர்வுகளில்  மட்டும் கலந்து கொண்டுள்ளதானதுஇ இக்காலப்பகுதியில் பிரதி அமைச்சர் வெளிநாடுகளில் இடம்பெற்ற சர்வதேச விளையாட்டு விழாக்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற வகையில் எமது நாட்டின் பிரதிநிதியாக இப்போட்டிகளில் கலந்து கொண்டிருந்தார்.

 

 

 

மேலும் இக்காலப்பகுதியில் பிரதி அமைச்சரின் தந்தை சுகயீனமுற்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் அவரின் கண்காணிப்பிலேயே பராமரிக்கப்பட்டும் வந்தார்.

 

 

 

பிரதி அமைச்சரின் தந்தை சிகிச்சை பலனின்றி இக்காலப்பகுதியிலேயே காலமானார். இதனால் பிரதி அமைச்சர் ஆழ்ந்த கவலையடைந்திருந்ததுடன் ஊரில் தங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது. இவ்வாறு இக்கட்டான சூழ்நிலைகளில் பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை.

 

 

 

பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்ற அமர்வுகளில் குறைந்தளவு கலந்து கொண்டமைக்கு மேற்குறித்த தகுந்த காரணங்கள் இருக்கும் பட்சத்தில் இதனை கருத்திற் கொள்ளாது இணையத்தளங்கள் செய்திகளை வெளியிடுவதனால் மக்கள் இதனை பிழையான கோணத்தில் விளங்கிக் கொள்ளும் நிலை உள்ளது.

 

 

 

எனவே மேற்படி செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து பார்த்தன் பின்னர் செய்தியினை வெளியிடுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.