நல்லாட்சி படு தோல்வி : “தொடர்ந்தும் ஜனாதிபதியுடன் இருக்க முடியாது…முடிவெடுக்குமாறு ஐ.தே.க. பெரும்புள்ளிகள் ரணிலுக்கு அழுத்தம்..!!

· · 1147 Views

தொடர்ந்தும் ஜனாதிபதியுடன் இணைந்து அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதன் மூலம் கட்சியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அந்தக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

 

 

இவர்களில் அநேகமானோரின் கருத்து தனியாக அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும். அப்படியில்லையெனில் அரசாங்கத்தில் இருந்து விலகி, கட்சி பின்நோக்கிச் செல்வதை நிறுத்த வேண்டும் என அவர்கள் கருதுகின்றனர்.

 

 

 

சபாநாயகரைத் தவிர்த்து நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 ஆசனங்கள் இருப்பதால் பெரும்பான்மை இல்லாத அரசாங்கமொன்றை கொண்டு நடத்த முடியும் என சிரேஸ்ட உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.