
நம்பிக்கை பிரேரணைக்கு ஆதராவாக வாக்களித்த அமைச்சர்கள் பதவி விலக அனுமதித்தது சுதந்திரக் கட்சி !! 16 அமைச்சர்கள் ராஜினாமா
· · 853 Viewsபிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அடுத்தவாரம் இராஜினாமா செய்யவுள்ளனர்.
ஏற்கனவே அறிவித்ததின் பிரகாரம் 16 அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில்,
“நாங்கள் ஜனாதிபதியிடம் ஏற்கனவே இது குறித்த எழுத்துப்பூர்வ முடிவை அறிந்திருக்கிறோம். பிரதமருக்கு எதிராக வாக்களித்தபின், அதே அமைச்சரவையில் அமைச்சர்களாக பணியாற்றுவது அரசியலமைப்பிற்கு உகந்ததல்ல.
இன்று எங்களுக்கு மத்திய குழுவில் இருந்து பச்சை கொடி கிடைத்துவிட்டது, ஆகவே நாம் எதிர்க்கட்சி கூட்டத்தில் உட்கார்ந்து மக்களுக்கு சேவை செய்வோம் என நம்புகிறோம் “என்று அவர் கூறினார்.
கடந்த 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இருப்பினும், பிரதமர் 46 வாக்குகள் பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடித்தார்.
இதற்கு ஆதரவாக 76 வாக்குகளும், பிரதமருக்கு 122 வாக்குகளும் கிடைத்தது. அதுமட்டுமன்றி அறிய தினம் 26 உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது சமூகமளிக்கவில்லை.