நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்களை நிராகரித்தார் ஜனாதிபதி

· · 551 Views

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்களை நிராகரித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களை தொடர்ந்தும் அரசில் நீடிக்குமாறு வலியுறுத்தினார்.

 

 

இந்தத் தகவலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இன்றிரவு (5) தெரிவித்தார்.

 

 

 

பிரதமர் ரணில் வநம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எஸ்.பி.திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜெயசேகர, அநுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி மற்றும் செனவிரத்ன ஆகியோர் வாக்களித்தனர்.

 

 

அவர்கள் ஆறு பேரையும் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமரிடம் கோரியிருந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 33 பேர், தற்போது அவர்கள் 6 பேருக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேணையைச் சமர்ப்பித்துள்ளனர்.இந்த நிலையிலேயே அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இந்த தகவலைத் தெரிவித்தார்.

 

 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் இன்று (5) காலை ஜனாதிபதியைச் சந்திருந்தனர்.

 

நாம் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதியிடம் கடிதங்களைக் கையளித்தோம். அவற்றை நிராகரித்த ஜனாதிபதி, அமைச்சுப் பதவிகளில் தொடருமாறு வலியுறுத்தினார். அத்துடன் கூட்டு அரசில் தொடர்வோம் என்றும் தெரிவித்தார் என்று அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.