நண்பேண்டா : ஹபீஸ் அல் ஆசாத்துக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை “வீட்டோ” செய்தது ரஷ்யா – மீண்டும் தப்பினார் அசாத்

· · 403 Views

சிரியாவில் இடம்பெற்ற இரசாயன தாக்குதல்கள் குறித்து ஐக்கியநாடுகள் அமைப்பு விசாரணை செய்யும் வகையில் அமைந்த தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்துள்ளது.

 

 

சிரியாவில் கடந்த 2014, 2015-ம் ஆண்டுகளில் இரசாயன தாக்குதல்கள் நடைபெற்றதில் ஏராளமானோர் உயிரிழந்திருந்தனர். இதுதொடர்பாக ஐக்கியநாடுகள் சபையின் கூட்டு விசாரணைக் குழு விசாரணை நடத்தியதில் சிரியா அரச படையினர் குளோரின் வாயுவை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரலில் கான் ஷோக்கான் பகுதியில் சரின் வாயு தாக்குதல் நடத்தப்பட்டதில் 100 பேர் உயிரிழந்திருந்தனர்னர்.

 

 

 

இந்தநிலையில் சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்றுமுன்தினம் கொண்டு வரப்பட்டது. மொத்தமுள்ள 15 உறுப்பு நாடுகளில் 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் சீனாவும் எகிப்தும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ரஷ்யாவும் பொலிவியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இறுதியில் தனது வீட்டோ அதிகாரத்தால் தீர்மானத்தை ரஷ்யா ரத்து செய்தது.

 

 

 

 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியர், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளுக்கு ஐ.நா. சபையின் எந்த தீர்மானத்தையும் ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரம் ஒருதலைப்பட்சமாக பயன்படுத்தப்படுவதாக பெரும்பாலான நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.