actresskavishaayeshanifuneralmoments284729

Climax : நடிகை கவீஷா அயேஷானியின் மரணத்தில் மர்மம்..!! ஒரு பிரபல அரசியல்வாதியை காப்பாற்ற பொலீசார் முயலுவதாக சந்தேகம்

· · 814 Views

வாகன விபத்தில் உயிரிழந்த பிரபல நடிகை கவீஷா அயேஷானியின் விபத்து தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துகள் இன்றுவரை வெளிப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றது.

குறித்த நடிகை மதுபானம் அருந்தி விட்டு சென்றதனாலேயே விபத்து ஏற்பட்டதாகவும் காதல் தொடர்பினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் இருவேறு கருத்துகள் கூறப்படுகின்றது.

actresskavishaayeshanifuneralmoments284729

தற்போது முக்கிய திருப்பு முனையாக குறித்த வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற பொலிஸார் முனைந்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடிகையின் மரணம் தொடர்பில் பொலிஸார் விடுத்திருந்த அறிக்கையும் நடிகையின் கார் விபத்து ஏற்பட்ட விதம் தொடர்பில் வெளியான கண்காணிப்பு கேமரா காணொளியும் வெவ்வேறு விதமாக காணப்படுகின்றமையே இதற்கான காரணமாக கருதப்படுகின்றது.

மிரிஹான பொலிஸ் பிரிவில் நுகேகொடை ஸ்டென்லி திலக்கரட்ன மாவத்தைக்கு எதிரில் ஜூப்ளி கணுவ பகுதியில் இருந்து சிரோமி சந்தி நோக்கி சென்ற கார் ஒன்று, எதிர்திசையில் வந்து நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் பின் பகுதியில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. என போலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் காணொளியில் எதிர்திசையில் வந்த பேருந்தின் மீது கார் மோதவில்லை. நேரோக பயணித்த கார் அடுத்த பக்கம் திரும்பி வீதியை விட்டு விலகிச் சென்று அதே திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் பின் பகுதியில் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டது என்பது தெளிவாக தெரிகின்றது.

மேலும் விபத்து ஏற்பட்ட வேளையில் வீதியில் வேறு வாகனம் எதுவும் பயணிக்கவும் இல்லை. வீதியில் போதுமான அளவு இடம் இருந்த போது நேராக சென்ற வாகனம் அடுத்த பக்கம் திரும்பியது எவ்வாறு? பொலிஸாரின் அறிக்கை பிழையாக ஏன் எழுதப்பட்டது?

தவறுதலாக பொலிஸ் அறிக்கை விடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகின்றது. விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் வேறு எதனையும் பொலிஸார் தெரியப்படுத்தவில்லை இதன் மூலம் பொலிசார் உண்மையை மறைக்கின்றனரா?

போன்ற பல்வேறு சந்தேகங்களும் வலுப்பெற்றுள்ளது. இதேவேளை குறித்த நடிகையுடன் அரசியல் பிரபலம் ஒருவரையும் தொடர்புபடுத்தி செய்திகள் வெளிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.