“நடிகர் கமலஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்…!! இந்து மகா சபை தலைவர் பண்டிட் அஷோக் ஷர்மாவின் கூற்றால் பெரும் சர்ச்சை

· · 785 Views

பிரபல நடிகர் கமல்ஹாசனையும் அவரைப் போல் இந்துத்துவத்தை எதிர்ப்பவர்களையும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபை தலைவர் பண்டிட் அஷோக் ஷர்மா கூறியுள்ள கருத்து இந்திய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியாவின் வாரப்பத்திரிகை ஒன்றில்  எங்கே ஓர் இந்து தீவிர வாதியை காட்டுங்கள் என்ற சவாலை, இந்துத்துவ சக்திகளால் விட முடியாத அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும், தீவிரவாதம் பரவி இருக்கிறது’ என்று கூறிய கருத்து இந்து அமைப்புக்களால் எதிர்க்கப்பட்டு வருகின்றது.

 

 

 

இக் கருத்து குறித்து அகில பாரத இந்துமகாசபை தலைவரின் எதிர்வினையை ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. கமல் போன்றோர் சுடப்பட்டோ தூக்கிடப்பட்டோ கொல்லப்பட்டால்தான்  மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

இந்து மதத்தையும், இந்து மதத்தை சார்ந்தவர்களையும் அவதூறாக பேசுபவர்கள் இந்த புண்ணிய பூமியில் வாழக்கூடாது என்றும் அவர்களுக்கு மரணம்தான் பதிலாக தரப்பட வேண்டும் என்றும்  அகில பாரத இந்துமகாசபை தலைவரின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.