நக்கத் கான் ( குஷ்பு) Says : இஸ்லாமிய தலாக் முறையில் மாற்றம் வேண்டும்..!! “சொப்பன சுந்தரி” குஷ்பு அதிரடி

· · 544 Views

குஷ்பு வாய் திறந்தாலே சர்ச்சைகளும் றெக்கை கட்டிக்கொள்கின்றன. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான குஷ்பு சமீபத்திய பேட்டி ஒன்றில், இஸ்லாமிய தலாக் (விவாகரத்து) முறைக்கு மாற்றாக அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவான ‘பொது சிவில் சட்டம்’ வந்தால் வரவேற்பதாக கருத்து தெரிவித்தார்.

seed_147_6903107_2mfadg7

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு காட்டிவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்தே இப்படியொரு கருத்து வெளியானதைத் தொடர்ந்து, ‘இது குஷ்புவின் சொந்தக் கருத்து. இதற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று பதறியடித்துக்கொண்டு பதில் கொடுத்தார் திருநாவுக்கரசர்.

‘திருநாவுக்கரசருக்கு குஷ்பு பாடம் எடுக்க வேண்டும்’ என்றார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இப்படி குஷ்பு திரி கிள்ளிய இவ்விவகாரம் ஆதரவும் எதிர்ப்புமாக தமிழக அரசியலில், வெடித்துக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில், தமிழகப் பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசினோம்….

”பொது சிவில் சட்டம் பற்றிய உண்மை நிலை தெரியாமல் குஷ்பு பேசியிருப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியிருக்கிறாரே?”

”உண்மை நிலை தெரியாமல் யார் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் எனது கேள்வி. முத்தலாக் எனப்படும் இஸ்லாமிய விவாகரத்துக்கு எதிராக இஸ்லாமியப் பெண்களே பலர் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார்கள்.

உலகில் பல்வேறு இஸ்லாமிய நாடுகளேகூட முத்தலாக் என்பது பெண்களின் உரிமைக்கு எதிராக இருக்கிறது எனக்கூறி மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள்.

இந்த நிலையில், குஷ்பு அந்தப் பழக்கம் உள்ள சூழ்நிலையில் வளர்ந்து தெரிந்து வந்தவர் என்பதால், அவர் உண்மை நிலை உணர்ந்துதான் பொது சிவில் சட்டத்தை வரவேற்றுப் பேசியிருக்கிறார்.

தன்னுடைய கட்சியின் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் துணிச்சலாக உண்மையைச் சொல்கிறார் குஷ்பு. திருமாவளவனுக்குத்தான் உண்மை நிலை தெரியவில்லை.

‘துப்பட்டா அணிந்துகொண்டுதான் பெண்கள் கோவிலுக்குள் போகவேண்டுமா?’ என்று பெண்ணுரிமை பற்றிப் பேசுகிற பெண்ணியவாதிகளும், திருமாவளவன், திருநாவுக்கரசர் போன்றோரும் இந்த விஷயத்தில் மட்டும் ‘பெண்ணுரிமை’யை வசதியாக மறந்து போவதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

பெண்களின் உரிமையாகப் பார்க்க வேண்டிய விஷயத்தை, மதம் – வாக்கு வங்கி சார்ந்த விஷயமாக ஏன் பார்க்கிறார்கள்? திருமாவளவனுக்கு பெண்களின் உரிமைகள் மீது அக்கறையில்லையா?

”ஆட்சிப் பொறுப்பேற்று 2 வருடங்களாக இதுபற்றிப் பேசாத பி.ஜே.பி அரசு உத்திரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் சமயத்தில் பொதுசிவில் சட்ட அமுல் குறித்துப் பேசுவது அரசியல் உள்நோக்கம்’ என்றிருக்கிறாரே குஷ்பு?”

ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, பாதுகாப்பைப் பலப்படுத்துவது என்று எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.

அதுவும் அல்லாமல், இன்றைக்கு இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விவாதப் பொருளாக ஆக்கியிருக்கிறது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சுருக்கமாக சொன்னால், எல்லாவற்றுக்கும் ஒரு கால நிர்ணயம் உண்டு.

மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், ஆதரவு தெரிவிக்கும் அதே நேரத்தில், இப்படியொரு கேள்வியையும் கேட்க வேண்டிய அரசியல் கட்டாயத்தில் குஷ்பு இருக்கிறார் என்பதுதான் உண்மை.

முத்தலாக் விவகாரத்தை எதிர்ப்பதோ, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதையோ பி.ஜே.பி இன்றைக்குத்தான் சொல்கிறது என்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள்.

பி.ஜே.பி-யின் அடிப்படைக் கொள்கையே ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதுதான். தமிழகத்தில் இருந்து பி.ஜே.பி சார்பாக 30 வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகையின் பெயரே ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்பதுதான்.

ஆதலால், நாங்கள் இன்று நேற்று பேசுவதல்ல…. இன்னொரு முக்கியமான விஷயம் ‘முத்தலாக்’ விவகாரத்தை சொல்லித்தான் பி.ஜே.பி ஓட்டு வாங்க வேண்டும் என்ற நிலையில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published.