நகர சபை சேர்மன்கள் இல்லாமலேயே சேவைகளை செய்துதான் இருக்கிறது..!! டைமுக்கு கூலம் அல்லாத நகர சபை அறிவிப்பு

· · 638 Views

இன்று புத்தளம் நகர  சபையைப்பற்றித்தான் பல தேர்தல் மேடைகளில் வாய்க்கு வந்தபடி விலாசித்தள்ளுகிறார்கள்.அதில் குறிப்பாக இரண்டுவருடங்களில் நகரசபை எதுவுமே செய்யவில்லை என்று பதவிக்கு வரவேண்டும் என்ற அவாவில் தங்களது பேச்சாற்றளை வளர்த்து வருகிறார்கள்.நான் பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில் நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் என்ன செய்திருக்கிறோம் என்பதை கீழ் குறிப்பிடுகின்றேன்

 

 

 

.01. சமகி மாவத்தை ,சீமாவளி போன்ற பாதைகளை பத்துலட்சம் ரூபா செலவில் அமைத்து கொடுத்திருக்கிறோம்.

 

 

02. நகரமண்டபத்தை 18 லட்சம் செலவழித்து சிறந்த முறையில் திருத்தி இருக்கிறோம் அத்துடன் 5 லட்சம் செலவில் சுற்று மதில் அமைத்து இருக்கிறோம்

 

 

03.வேலைத்தளத்தை சுற்றி 5 லட்சம் செலவில் மதில் அமைத்திருக்கிறோம்.

 

 

 

04.நகரசபைக்கு ஒரு புதிய கெப் வாகனம் 89 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது அதில் பழை வாகணத்திற்கான இன்ஷுரன்ஸ் பணம் 69 லட்சம் மிகுதிபணம் நகரசபையினால் கொடுக்கப்பட்டது

 

 

 

05.களி பவுசர்,பொதுமல சலகூடம் அமைத்த வகையில் நிலுவையாக இருந்த 22 லட்சம் வழங்கப் பட்டுள்ளது

 

 

 

06.வடிகால் அமைப்பதற்கு பெறப்பட்ட நீண்ட கால கடனில் செலுத்தப்படாம இருந்த 20 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது

 

 

 

07. பஸ் நிலையம் கட்டியதற்கான மிகுதிப்பணம் 20 லட்சம் கொடுக்கப் பட்டுள்ளது

 

 

 

08.அல்பா மார்க்கட் தற்போது 4 கோடி ரூபா செலுத்தப் பட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

 

 

 

09.கொழும்பு பேஸ் தற்போது 5 லட்சம் செலவில் திருத்தப் பட்டுவருகின்றது

 

 

 

10.2013ல் வழங்கப்படாம இருந்த ஊழியர்களில் நிலுவைபணம்8. இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

11. 84 ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மாத்திரம் தான் வழங்கப்படுள்ளது.அவர்களுக்கு விவாகப்படி 2016 மேமாதமிருந்து டிசெம்பர்மட்டும் 52 இலட்சம் ரூபா வழஙப்பட்டுள்ளது.

 

 

 

12. நகரசபைகாரியாலயத்தில் 18 இலட்சம் ரூபா செலவில் AC பொருத்தப்பட்டுள்ளது. 

 

 

 

13.  beach wallyball சுற்றிவளைத்து வேலி அடைப்பதற்கு 10 இலட்சம் ரூபா செலவலிக்கப்பட்டுள்ளது. எனவே புத்தளம் நகர மக்களே மேற்குறிப்பிட்ட சேவைகளை புத்தளம் நகரசபை புத்தளத்திற்கு செய்துள்ளது என்பதை அறியத்தருகின்றேன்.

 

Safeek  Mohamed

One comment

  1. செய்துதான் உள்ளார்கள். ஆனால் குப்பை அகற்றல் நடவடிக்கை ஒழுங்கின்மையே டெங்கு பெருக்கத்திற்கு காரணம். முடிந்தால் இரண்டு நாளைக்கு ஒரு தடவையாவது ஒவ்வொரு பகுதியிலும் குப்பை அகற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் 15-20நாள் பிறகுதான் குப்பை வண்டி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.