நகரசபைத் தேர்தலில் 10% பட்டதாரிகளுக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும் !! புதிய யோசனை நிறைவேற்றம்

· · 313 Views

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது வேட்பு மனுத் தாக்கலின் போது 10 % பட்டதாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று விஷேட யோசனை ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

 

இன்று காலை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் தலைமையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் விஷேட பிரதிநிதிகள் மாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

அதன்படி இந்த யோசனை ஜனாதிபதி மற்றும் கட்சின் பொதுச் செயலாளருக்கு அடுத்த வாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறினார்.

 

 

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு வழங்குகின்ற தொழில் வாய்ப்பை முறையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், கட்சி பேதமின்றி தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

 

 

இந்த மாநாட்டின் போது ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் எரிக் வீரவர்தன, ஶ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனுல சமல் பெரேரா, தேசிய ஒருங்கிணைப்பாளர் புத்திக இத்தமல்கொட உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.