தேவாலயத்தின் கூரையை புனரமைக்காவிட்டால் இஸ்லாத்திற்கு மாறுவோம்..!! ஒரு கிராமமே எழுச்சியில்

· · 706 Views

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


புயலால் சேதமடைந்த தமது தேவாலயத்தை பாதுகாத்து தராவிட்டால் இஸ்லாம் மதத்திற்கு மாறப்போவதாக செர்பியா நாட்டு கிராமம் ஒன்றின் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

தலைநகர் பெல்கிரேட்டுக்கு அருகில் இருக்கும் பரிஷ் கிராம மக்கள் செர்பிய ஓர்தடொக்ஸ் திருச்சபைக்கு கடிதம் ஒன்றை எழுதி இந்த எச்சரிக் கையை விடுத்துள்ளனர். சேதமடைந்திருக்கும் தேவாலயத்தை புனர்நிர் மாணம் செய்ய உதவ வேண்டும் என்று அந்த கடிதத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

“எமக்கு உதவி கிடைக்காவிட்டால் நாம் அனைவரும் இஸ்லாம் மதத்திற்கு சென்று செர்பிய சட்டத்தின் கீழ் எமது தலங்களுக்கு சிறந்த பாதுகாப்பை பெறுவோம்” என்று அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

 

கடந்த ஜ{லையில் இடம்பெற்ற பலமான புயல் காற்றினால் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவா லயத்தின் கூரை அடித்துச் செல்லப்பட்டது. உள்ளுர் பாதிரியார் பழைய தேவா லயத்தை அகற்றி விட்டு அங்கு புதிய தேவாலயம் ஒன்றை கட்ட முயற்சித் துள்ளார்.

 

 

 

எனினும் பழைய தேவா லயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள் ளனர்.

chris

Leave a Reply

Your email address will not be published.