தேசிய வீரன் ஏ.எம். அப்ரித் : தேசிய ரீதியிலான உயரம் பாய்தலில் இரண்வாது வந்து புத்தளத்தின், சாஹிராவின் பெருமையை உயர்த்தினார் !!

· · 541 Views
ரூஸி சனூன்  புத்தளம்

அகில இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் தரம் 12 ஈ டெக் பிரிவில் கல்வி பயிலும் மாணவனான ஏ.எம். அப்ரித் 18 வயதுக்குட்பட்ட உயரம் பாய்தல் போட்டியில் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடம் பெற்று பாடசாலைக்கும் புத்தளம் நகருக்கும் பெருமையை பெற்றுக்கொடுத்துள்ளார்.

 

 

 

 

கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட இந்த போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (15) கொழும்பு கொட்டாவ மஹிந்த ராஜபக்ஷ தியகம விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போதே இந்த மாணவன் இச்சாதனையை  நிலை நாட்டியுள்ளார்.
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி வரலாற்றில் முதற் தடவையாக இந்த வரலாற்று சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே புத்தளம் வலய, மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்றே இந்த மாணவன் அகில இலங்கை ரீதியான போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
கல்லூரி முதல்வர் எஸ்.ஏ.சி. யாக்கூபின் வழிகாட்டலில் உடற்கல்வி போதனாசிரியர் எம்.எப்.எம் துபைல் இந்த மாணவருக்கு முழுநேர பயிற்சிகளை வழங்கி இருந்தார்.
கிடைக்கப்பெற்ற விருதுடன் திங்கட்கிழமை புத்தளம் வருகை தரவுள்ள இந்த மாணவரை ஊர் தழுவிய ரீதியாக வரவேற்கும் வரவேற்பு நிகழ்வொன்றினை கல்லூரி நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் குழுக்கள் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன.
VAT

One comment

  1. Congrats…. Mr. AM Afrith furthermore, Master Mr. MFA thufial is a good / excellent traineer specially in high jump because we both were participated in several high jump competition in 1993/94/95 S… ( Focus 95 ) Anyway carry on… Mr. Arfith… We will support you forever…

Leave a Reply

Your email address will not be published.