தாருன் நுஸ்ராவில் இருந்து முஸ்லிம் பிஞ்சு சேயாக்களை விடுதலை செய்தது நீதிமன்றம் !! இஸ்லாமிய இயக்கப் பெண்மணிகளின் பித்தலாட்டம் முடிவு

· · 659 Views
தாருன் நுஸ்ரா இல்லத்தில் இருந்து அனைத்து சிறுமிகளும் விடுதலை. பொய் சொல்லிப் பித்தலாட்டம்  பண்ணியவர்களுக்கு  நீதிமன்றம்  பதில்.
நேற்றைய தினம் நுகேகொட மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய தாருன் நுஸ்ராவில் இருந்த அனைத்து சிறுமிகளும் இன்று மாலை அங்கிருந்து விடுவிக்கப் பட்டு வேறு இடங்களுக்கு உரிய அதிகாரிகளால் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர்.
“சிறுமிகள் பாதிக்கப்பட்டு இருந்தால், நீதிமன்றம் அவர்களை எங்களிடம் தந்து இருக்குமா?” என்று கேட்டு ஊரை ஏமாற்றியவர்களின் வாயை அடைக்க சிறிது காலம் தேவைப்பட்டது. ( பாதிக்கப்பட்ட சிறுமிகள் மீண்டும் தாருன் நுஸ்ரா இல்லத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டதற்கு ஒரு சதிகாரத் தம்பதியினர் செய்த மோசடி வேலையே காரணம், நேரம் வரும்பொழுது நிச்சயம் அதுவும் வெளிப்படுத்தப்படும்.)
முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினரின் வாக்குகளை முக்கிய மூலதனமாக வைத்து நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சிக்கு வந்து, பச்சை பச்சையாக நிதி மோசடி செய்து மாட்டிக்கொண்டு, அதனைத் திசை திருப்ப கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராகவே கலவரத்தை தூண்டிவிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார செல்வாக்கைப் பயன்படுத்தி சிறுவர் தேசிய பாதுகாப்பு அதிகார சபையை (NCPA) முடக்கி, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்கும் படியாக வழக்கை முறையாக நகர்த்த விடாமல் இடையூறு செய்து வந்தது ஒரு கிரிமினல் கும்பல், ஆம் சந்தேக நபரை காப்பாற்ற துடிதுடிக்கும் மேட்டுக்குடி மோசடிக் கிரிமினல் கும்பல்தான் அது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும், முக்கிய அமைச்சு ஒன்றினுள்ளும் உள்ள செல்வாக்கை அது பயன்படுத்தி இந்த துஷ்பிரயோகத்தை மேற்கொண்டு வந்திருந்தது.
இந்நிலையில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர்கள் தேசிய அளவில் தாமரை மொட்டிற்கு வாக்களித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கும், நல்லாட்சிக்கும் தலையில் மண்ணள்ளிப் போட்டதனைத் தொடர்ந்து தங்கள் கோவணத்தைக் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளிகள் தள்ளப்படவே, தாருன் நுஸ்ரா விடயத்தில் மூக்கை நுழைத்து NCPA ஐ இனியும் முடக்க முடியாத நிலை கிரிமினல் கும்பலுக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக ஏற்பட்ட ஆரோக்கியமான திருப்புமுனை காரணமாகவே தற்பொழுது சிறுமிகள் தாருன் நுஸ்ராவில் இருந்து காப்பாற்றப்பட்ட விடயம் சாத்தியமாகியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும், தாருன் நுஸ்ராவில் பாதிக்கப் பட்ட சிறுமிகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தாருன் நுஸ்ரா சிறுமிகளின் வாழ்வில் ஒரு மொட்டாக மலர்ந்து இருக்கின்றது என்பது புரிகின்றது.
-ரி இ-

Leave a Reply

Your email address will not be published.