தாருன் நுஸ்ராவின் முஸ்லிம் அநாதை சிறுமி களஞ்சியசாலையில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதை முறையிட்டபோது, தவறுதலாக கைப்பட்டிருக்கும் என்று கூறிய Dr. மரினா ரிபாய் – வாக்குமூலம்

· · 1381 Views

மேல் மாகாண சபையின் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும்கொழும்பை அண்மித்த கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாருன் நுஸ்ரா எனும் ஆதரவற்ற சிறுமிகளுக் கான இல்லத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில், அங்கு சேவையாற்றிய தொண்டர் ஆசிரியை ஒருவர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்க முற்பட்ட போதும் அதனைப் பொலிஸார் பெற்றுக்கொள்ளாமல் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

 

 

 

குறித்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 18 சிறுமிகளில் 9 சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கொஹரவலை பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைகள் தொடர்பிலான வழக்கு நேற்று நுகேகொடை கங் கொடவில நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

 

 

 

 

குறித்த தொண்டர் ஆசிரியை சட்டத் தரணி ஒருவர் ஊடாக பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்குவதற்கான கோரிக்கையை நேற்று முன்வைத்தார் .

 

 

 

குறித்த துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில், தான் அறிந்த விடயங்களை ஆரம்பத்திலேயே பொலிஸாரிடம் வாக்கு மூலமாக அளிக்க முற்பட்ட போதும் பொலிஸார் அதனைப் பெற்றுக்கொள்ள வில்லை என குறித்த ஆசிரியை சட்டத் தரணி ஊடாக நீதிமன்றுக்கு அறிவித்த நிலையில், எதிர்வரும் திங்கள் அன்று காலை 10.30 மணிக்கு குறித்த ஆசிரியையிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள பொலிஸாருக்கு நீதிமன்றம் கட்டளை யிட்டது இந் நிலையில் நேற்று குறித்த சிறு மிகள் துஷ்பிரயோக வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் இலவசமாக, பல சட் டத்தரணிகள் ஆஜராகி சிறுமிகளுக்கான நீதியை உறுதி செய்ய மன்றை வலியுறுத்தினர்.

 

 

 

 

பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் நேற்று சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், சட்டத்தரணி சுலைமான், சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான சட்டத்தரணிகளான நிலானி மத்ரிநாயக்க எம். மங்களேஷ்வரி சங்கர் உள்ளிட்ட பலர் இவ்வாறு மன்றில் பிரசன்னமாகியி ருந்தனர் குறித்த சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவர்களுக்கான நீதி, பாதுகாப்பு தொடர்பில் மன்றின் அவ தானம் சட்டத்தரணிகளால் கொண்டு செல்லப்பட்டது.

 

 

 

இந்நிலையில் குறித்த பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளைத் துரி தப்படுத்தி, அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையையும் பெற்று மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கொஹு வலை பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்த ரவிட்டது.

 

 

 

அதன்படி இது தொடர்பிலான வழக்கானது எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி இந்த பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் முதன் முதலில் தகவல் வெளிப்படுத்தப்பட்டது.

 

 

 

 

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தொலைபேசி ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடானது அப்போது உடனடியாக விசார ணைகளுக்காக கொஹவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமிந்த எதிரிசூரியவிடம் பாரப் படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

அதன்படி, தாருன் நுஸ்ரா சிறுவர் இல்லத்துக்குச் சென்ற பொலிஸார் அங்கிருந்த 18 சிறுமிகளை பொலிஸ் நிலையம் அழைத்து வந்து வாக்கு மூலம் பதிவு செய்தும், சிறுவர் இல்லத்தை சோதனை செய்தும் விசார ணைகளை நடாத்தினர் இதன்போது, ஒரு சிறுமி கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையும் மேலும் 8 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் தொல்லைகளுக்கு தொடர்ந்து உள்ளாக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

 

 

 

 

குறித்த சிறுமிகளைப் பொலிஸார் வைத்தியரிடம் முன்னிலைப் படுத்தி பெற்றுக்கொண்ட வைத்திய அறிக்கைகள் ஊடாக இது உறுதியாகி யுள்ள நிலையில், குறித்த ஆதரவற்ற சிறுமிகளுக்கான இல்லத்தின் பொறுப் பாளராகச் செயற்பட்ட பெண்ணின் கணவரான மொஹம்மட் சரிப்தீன் முனாபர் என்பவரை பொலிஸார் முதலில் கைது செய்ததுடன் பின்னர் துஷ்பிரயோ கங்களுக்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் அவரது மனைவியான சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளராகச் செயற்பட்ட சாகிரா எனும் பெண்ணையும் கைது செய்திருந்தனர்.

 

 

 

இந் நிலையில் அவர்கள் இருவரும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் பிரதான சந்தேக நபரான முனாபருக்கு எதிராக 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க திருத்தச் சட்டம் ஊடாக திருத்தப் பட்ட தண்டனைச் சட்டக் கோவையின் 365(2) அ, ஆ மற்றும் 386 ஆவது பிரிவு
களின் கீழ் பொலிஸார் குற்றம் சுமத்தியுள் ளதுடன் அவரது மனைவிக்கு தண் டனைச் சட்டக் கோவையின் 102 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக குற்றம் சுமத்தியுள்ளனர் பொலிஸார் நீதிமன்றுக்கு வழங்கியுள்ள அறிக்கைகளின் பிரகாரம், நீண்ட நாட்க ளாக இந்த பாலியல் துஷ்பிரயோக நட வடிக்கைகள் சூட்சுமமாக இடம்பெற்று வந்துள்ளமை சிறுமியரின் சாட்சியங்கள் ஊடாக தெரியவந்துள்ளது.

 

 

 

 

கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமியின், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வாக்கு மூலத்தின் படி, குறித்த சிறுமியின் தாய் சிறுமிக்கு 5 வயதாக இருக்கும் போது பிறிதொரு நபரை திருமணம் செய்ததன் ஊடாக அச்சிறுமி அநாதரவாக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

பின்னர் மீளவும் தாய் குறித்த சிறுமியை பொறுப்பேற்ற போதும் பாதுகாப்பற்ற நிலையில் வீதியில் அநாதரவாக இருந்த நிலையில் அச் சிறுமியை பொலிஸார் இந்த சிறுவர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். அது முதல் அங்கிருந்து சர்வதேச பாடசாலை ஒன்றில் குறித்த சிறுமி கற்றுள்ளார்.

 

 

 

12 வயதான அந்தச் சிறுமி உள்ளிட்ட ஏனைய அனைத்து சிறுமிகளும் சந்தேக நபரினாலேயே பாடசாலைக்கு வேனில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

 

 

 

 

இந்நிலையில் சிறுவர் இல்லத்தில் இருக்கும் போது, அங்குள்ள களஞ்சிய அறைக்கு அழைத்துச் சென்றே சந்தேக நபர் அச்சிறுமி மீது பாலியல் துஷ்பி ரயோகம் புரிந்துள்ளதாகவும், அதன் பின்னர் அவர் சிறுமியை மிரட்டியுள்ளதா கவும் சிறுமியின் வாக்கு மூலம் ஊடாக தெரியவந்துள்ளது.


களஞ்சிய அறைக்கு மூன்று சிறு மிகளை அழைத்துச் செல்வதாகவும் ஏனைய இருவருக்கும் வேலைகளைக் கொடுத்துவிட்டு தன்னை பாலியல் துஷ் பிரயோகத்துக்கு சந்தேக நபர் உட்படுத் தியதாக அந்த வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

இதனைவிட இந்த துஷ்பிரயோகம் தொடர்பில் இல்லப் பொறுப்பாளரான பெண்ணிடமும், மற்றொரு ஆசிரியையிடமும் தெரிவித்த போதும் அவர்கள் குறித்த சந்தேக நபர் இருக்கும் இடத் துக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியதோடு நிறுத்திக்கொண்டதாகவும் அதனைத் தடுக்க எந்த நடவடிக்கைக ளையும் எடுக்கவில்லை என்றும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் .

 

 

 

 

 

இதனைவிட பொலிஸார் நீதிமன்றுக்குக் கொடுத்துள்ள அறிக்கைகளின் பிரகாரம், சிறுமிகள் மீதான பாலியல் சேஷ்டை தொடர்பில், சிறுவர் இல்லத்தின் உரிமையாளராகக் கருதப்படும் டாக்டர் மரீனா ரிபாய்  என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ள போதும் அவரும் அதனை உதாசீனம் செய்துள்ளதாகவும் தவறுதலாக கைதட்டுப்பட்டிருக்கும் என அவர் பதிலளித்துள்ளதாக பதிவு செய் யப்பட்ட வாக்கு மூலங்களை அடிப்படை யாக வைத்து பொலிஸார் நீதிமன்றுக்குச் சமர்ப்பித்துள்ள விசாரணை அறிக்கைகள் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

அத் துடன் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி சுமார் 20 தடவைக்கும் மேல் இவ்வாறு துஷ்பிர யோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது .

 

 

 

 

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கட்டுப்பாட்டில் சிறுமிகள் இதனிடையே பாதிக்கப்பட்ட குறித்த சிறுவர் இல்ல சிறுமியர், தற்போது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழேயே, குறித்த இல்லத்தில் இருந்தவாறு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சிறுமிகளுக்காக மன்றில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி நிலானி
மந்ரிநாயக்க தெரிவித்தார்.

 

 

 

இந் நிலையிலேயே பொலிஸார் சந்தேக நபர்களுக்கு எதிராக ஒரு சிறுமியை கடும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை மற்றும் 3 சிறுமிகளை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் வெவ்வேறாக இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் இந்நிலையிலேயே அது தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் நிலையில் வழக்கானது ஜனவரி மாதம் 25 ஆம் திகதி விசாரணைக்கு மீள எடுக்கப்படவுள்ளது.

எம்.எப்.எம். பஷீர் ( விடிவெள்ளி 08/12/2017 )

One comment

  1. Amadu samukatil eppadi nadakka anumadi kodukkamudiyadu 25m tekathi corts anna solludu. Andu pappom

Leave a Reply

Your email address will not be published.