தாஜுதீன் கொலைக் குற்றத்தின் சூத்திரதாரி திஸ்ஸ விமலசேன டட்லி சிறிசேனவின் உதவியாளராக நியமனம் !! ஜனாதிபதிக்கே ஆப்பு

· · 940 Views

இன்றைய பேசுபொருளாக இருப்பவர் முதியான்சலாகே திஸ்ஸ விமலசேன.

 

 

 

 

திஸ்ஸ விமலசேன, வெல்லவாய பிரதேசத்தில் வசித்து வருகிறார். ஒருகாலத்தில் ராஜபக்ச வளாகத்தில் வேலை செய்துகொண்டிருந்த திஸ்ஸ, இலங்கை இராணுவத்தில் சாதாரண சிப்பாயாக இணைந்து கொண்டார்.

 

 

 

 

சாதாரண சிப்பாயாக இணைந்துகொண்ட திஸ்ஸ, 2006ஆம் ஆண்டு கோப்ரலாக பதவி உயர்வைப் பெற்றிருந்தார்.

 

 

 

 

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சாரதியாக திஸ்ஸ இணைந்துகொண்டார். பின்னர் ராஜபக்ச யுகம் நிறைவுக்கு வந்தபோது அவர் தன்னை கப்டன் திஸ்ஸ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். எனினும், அவருக்கு கப்டன் பதவி எவ்வாறு கிடைத்தது என்பதற்கு இலங்கை இராணுவத்தில் எவ்வித பதிவும் இல்லை.

 

 

 

 

இராணுவத்தில் எவ்வாறு இருந்த போதிலும் ராஜபக்ச குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களில் பங்கேற்ற திஸ்ஸவிற்கு கப்டம் பதவி கிடைக்க வேண்டும்.

 

 

 

 

திஸ்ஸ என்ற இந்த நபர் முன்னாள் ரகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

திஸ்ஸ என்ற இந்த நபரை வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்க ராஜபக்ச தரப்பினர் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்த போதிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதனைத் தடுத்து நிறுத்தினர்.

 

 

 

 

திஸ்ஸ என்ற நபருக்கு 12 வங்கிக் கணக்குகள் இருக்கின்றனர். எனினும், அந்தக் கணக்குகளில் 11 லட்ச ரூபா பணமே இருக்கிறது. அவரது பெயரில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே இருக்கின்றனர். எனினும், தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திஸ்ஸவின் மனைவியின் பெயரில் பெருமளவிலான சொத்துக்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

 

 

 

 

இதனைத் தவிர திஸ்ஸ குறித்த ஏராளமான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. இந்த நிலையில் தான், திஸ்ஸ தனிமைப்படுத்தப்பட்டால், தமக்கு ஆபத்து என்பதை அறிந்துகொண்ட மகிந்த தரப்பினர், திஸ்ஸவை வெளிநாடு அனுப்பிவைக்க தொடர் முயற்சிகளை முன்னெடுத்திருந்தனர். எனினும், இந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.

 

 

 

 

இதனால், மகிந்த ராஜபக்ச தரப்பினர் வேறொரு வழியைப் பின்பற்றினர். திஸ்ஸவைக் காப்பாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேனவிடம் திஸ்ஸவை பணியமர்த்தினர்.

 

 

 

 

தற்போது திஸ்ஸவின் தொழில் வழங்குனர் டட்லி சிறிசேன ஆவார். இலங்கையில் மோசடி அரசியல் எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு இதனைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை என எண்ணுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published.