
தாஜுதீன் கேஸில் புதிய திருப்பம்..!! தாஜுதீன் கொல்லப்பட்ட பின்னர் அவரின் நம்பருக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு குறித்து விசாரணை..!! மகிந்த ரெஜிமேண்டுக்கு மீண்டும் தூக்கம் வராது
· · 908 Viewsறகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் அவரது நண்பருக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தாஜுடீன் கொலை செய்யப்பட்ட சில மணித்தியாலங்களுக்கு பின்னர் அவரது நண்பரான அஹமட் சபருக்கு இந்த தொலைப்பேசி அழைப்பு கிடைத்துள்ளதாக மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அழைப்பு வழக்கு விசாரணை தொடர்பில் தீர்மானமிக்க விடயமாகும் என்பது அவரது கருத்தாகியுள்ளது.
அதன் மூலம் கொலை தொடர்பில் இதுவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, றகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.