தவறுகள் ஏற்படுவது சகஜம்..மறைப்பதற்கு எதுவுமில்லை – விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த பிரதமர் கூறுகிறார்

· · 696 Views

நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில், பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குத் தெளிவுபடுத்த, இன்று (20) சந்தர்ப்பம் கிட்டியதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

 

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக, மேற்படி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த பிரதமர், அங்கிருந்து வெளியேறிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.

 

 

 

அங்கு தொடர்ந்துரைத்த பிரதமர், ‘குறைபாடுகள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பினும், அவற்றை ஒருபோதும் மறைத்துவிட முடியாது. நான் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அவைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்போர், எவ்வித அச்சமுமின்றி, ஆணைக்குழுவில் முன்னிலையாகினோம்’ என்றார்.

 

 

 

‘ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு, எனக்கொரு சந்தர்ப்பம் வழங்கியதையிட்டு, ஆணைக்குழுவின் தலைவருக்கு, நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்று நான் பல விடயங்களைத் தெளிவுபடுத்தினேன். எமது பொருளாதாரக் கொள்கைகள். நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பவை தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பம், எனக்கு இன்று கிட்டியது. நானும் எனது கட்சியின் அவைத் தலைவரும், செயலாளரும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும், எவ்வித அச்சமும் இன்றி, ஆணைக்குழுவில் முன்னிலையாகினோம்.

 

 

 

‘இந்த நல்லாட்சியை, தொடர்ந்து நாம் முன்கொண்டு செல்வோம். எதுவும் இங்கு மறைப்பதற்கில்லை. தவறுகள் இடம்பெறலாம். குறைபாடுகள் ஏற்படலாம். எவ்வாறாயினும், நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டுசெல்வோம்’ என, பிரதமர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.