தரம் 4,5 மற்றும் தரம் 10, 11 ஆகியவற்றுக்கான பாடநூல்களை மீள் பாவனைக்கு உற்படுத்துமாறு கல்வி அமைச்சு அதிபர்களுக்கு உத்தரவு

· · 255 Views

ஒலுமுதீன் கியாஸ்

பாவனைக்கு உட்படுத்தாத தரம் 4, 5 மற்றும் தரம் 10, 11 ஆகியவற்றுக்கான பாடநூல்களை அச்சிடுவதற்காக, அரசு வருடந்தம் செலவிடுகின்ற நிதியானது, மொத்தப் பாடநூல்களை அச்சிடுவதற்கு செலவிடுகின்ற நிதியின் 40 வீதமாகும்..

images (2)

இவ்வாறு பெருந்தொகையான நிதி வருடாந்தம் வீணாவதால் தரம் 4,5 மற்றும் தரம் 10, 11 ஆகியவற்றுக்கான பாடநூல்களை மீள் பாவனைக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கையொன்றை, கல்வி வெளியீட்டுத் திணைக்களம்,  சகல பாடசாலை அதிபர்களுக்கும்  இன்று (17) அனுப்பி வைத்துள்ளது.

பாவனைக்கு உட்படுத்தாத தரம் 4, 5 மற்றும் தரம் 10, 11 ஆகியவற்றுக்கான பாடநூல்களை அச்சிடுவதற்காக, அரசு வருடந்தம் செலவிடுகின்ற நிதியானது, மொத்தப் பாடநூல்களை அச்சிடுவதற்கு செலவிடுகின்ற நிதியின் 40 வீதமாகும். இவ்வாறு பெருந்தொகையான நிதி வருடாந்தம் வீணாவதால் தரம் 4,5 மற்றும் தரம் 10, 11 ஆகியவற்றுக்கான பாடநூல்களை மீள் பாவனைக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சுற்றறிக்கையொன்றை, கல்வி வெளியீட்டுத் திணைக்களம்,  சகல பாடசாலை அதிபர்களுக்கும்  இன்று (17) அனுப்பி வைத்துள்ளது. அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தற்போது தரம் 6, 7, 8, 9க்கான பாடநூல்கள் மாத்திரமே மீள்பாவனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதுடன், ஆரம்பப் பிரிவு மற்றும் தரம் 10, 11 ஆகியவற்க்கான பாடநூல்கள் மீள்பாவனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

எனினும், பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள பாடநூல்கள், எவ்விதக் காரணமும் இன்றி வீணாவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. கல்வி வெளியீட்டுத் திணைக்களம், வருடாந்தம் 410 வகையான பாடநூல்களை அச்சிட்டு விநியோகித்து வருகின்றது. இதற்காக அரசாங்கம், வருடாந்தம் 4.5 பில்லியன் ரூபாயைச் செலவு செய்கின்றது. இவ்வாறான வீண் விரயத்தை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தும் நோக்கோடு, இது தொடர்பாக எண்ணக்கரு விளக்கத்தை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கவும், பயன்படுத்திய பாடநூல்களை பெற்றுக் கொடும்கும் பொறிமுறையொன்றை  உருவாக்குவதற்கும், பாவனைக்கு உதவாத பாடநூல்களை தெரிவு செய்து அகற்றுவதற்கும் அதிபர்கள் நடவடிக்கை எடுப்பதோடு, பொறுப்புக் கூறும் தன்மையை அதிபர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.