“தன்னிடம் வேலை செய்த இலங்கையருக்கு சொத்தில் பங்கு கொடுத்தார் சவூதி கோடீஸ்வரர் !! அவரைத் தேடும் பிள்ளைகள்

· · 2483 Views

சவூதி அரேபியாவில் 20 வருடங்களுக்கு முன்னர் தொழில் புரிந்து வந்த இலங்கையர் ஒருவருக்கு தனது எஜமானால் எதிர்பாராத வகையில் அதிஷ்டம் கிடைத்துள்ளது.

 

 

 

சவூதி அரேபியாவில் 20 வருடங்களுக்கு முன் சேவையாற்றிய இடத்தின் உரிமையாளர் குறித்த இலங்கையருக்கு தனது இறுதி விருப்ப உயில் பத்திரத்தில் பங்கை ஒதுக்கியுள்ளார்.

 

 

உயிலுக்கு அமைய பணத்தை பெற்றுக்கொடுக்க இலங்கை நபரின் தகவல்களை பெற்று தருமாறு உயில் எழுதிய சவூதி எஜமானின் புதல்வர், ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

 

 

இலங்கையை சேர்ந்த மொஹமட் ஷியான் ஹமீட் லெப்பை என்பவரே உயிலில் பங்காளியாக பெயரிடப்பட்டுள்ளார்.

 

 

 

20 வருடங்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படத்தை தவிர இலங்கை நபரின் வேறு எந்த விபரங்களும் சவூதி எஜமானிடம் இல்லை பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

 

 

மொஹமட் ஷியான் ஹமீட் லெப்பை” என்பவர் பற்றிய தகவல்களை அறிந்திருந்தால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 011-3560912 -011-2864100 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிய தருமாறு பணியகம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.