தனது பதவியைக் காப்பாற்ற கடைசி முயற்சியாக ஜனாதிபதியை சந்திக்கிறார் ரவி..!! நெய்னா மறைக்காருக்குப் பிறகு முஸ்லிம் நிதியமைச்சராவாரா கபீர்..?

· · 808 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் அரசாங்கம் தொடர்பிலான கலந்துரையாடலாகும். ஜனாதிபதி வெசக் பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்டும் பொலன்னறுவை விஜயத்தின் பின்னர் இக்கலந்துரையாடல் இடம்பெறும்.

3868f8cb4a5d4eac9261eb404cd104d4_XL

சில மாதங்களாக அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு அறிக்கைகள் வெளிவந்ததுடன் அதில் மிகவும் விமர்ச்சனத்திற்குற்பட்டது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு பதிலாக வேறொருவரை நியமிக்க வேண்டும் என.ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் ஸ்ரீலசுக ஆதரவாளர்கள் ரவி கரணாநாயக்கவிற்கு பதிலாக வேறொருவரை நிதி அமைச்சராக நியமிப்பதற்கு ஆவலாக இருப்பதுடன் நிதி அமைச்சை வியாபார துறைக்கு சம்பந்தம் இல்லாத நபர் ஒருவரை நியமிக்க வேண்டும் என அவ் ஆதரவாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இதற்கிடையில் சுகாதார அமைச்சர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நாட்டிடற்கு ஏற்றவாறு ஒரு அமைச்சரவையை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவை தவிர நிதி அமைச்சுக்கு பொருத்தமான ஒருவர் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து தெரிவிக்கின்றது. எவ்வாறாயினும் எதிர்வரும் காலங்களில் அமைச்சில் மாற்றம் ஏற்பட வாய்பு உள்ளது எனவும் அது தொடர்பில் பிரிதொரு அமைச்சராக இருக்கும் ஐதேக முக்கியஸ்தர’ ஒருவரை ஜனாதிபதி ஆதரவாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

நிதி அமைச்சில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து இலங்கை மத்தியின் முக்கியஸ்தர்கள் சிலர் கடந்த நாட்களில் தீர்மானம் எடுத்துள்ளதுடன் ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து கடுமையான அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நல்லாட்சி அரசாங்கம் மீதான குற்றச்சாட்டை நீக்கும் நோக்கில் அமைச்சரவை மாற்றம் ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்திருந்தும் அமைச்சரவை திருத்தம் காரணமாக இடம்பெறவில்லை இருப்பினம் வெகு விரைவில் இடம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.