தனது நாட்டுக்கான விசா கட்டுப்பாடுகளை தளர்த்தியது தாய்வான் அரசாங்கம் !! இலங்கையர்கள் ஒன்லைனில் விசா பெறலாம்

· · 303 Views

இலங்கை உட்பட்ட சில நாடுகளுக்கான வீசா நடைமுறையை இலகுப்படுத்தவுள்ளதாக தாய்வான் வெளிவிவகார அமைச்சினை மேற்கோள் காட்டி தாய்வான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன்படி இலங்கை, தாய்லாந்து, புருனை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான வீசா நடைமுறையில் பல சிறப்பு சலுகைகளை வழங்க தாய்வான் அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

hdr-city-wallpaper-6

தாய்வானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிவ் சௌத் பௌன்ட் கொள்கையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இலங்கை, இந்தியா, பங்களாதேஸ் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வர்த்தகர்கள் தாய்வானுக்கான இணையம் மூலமான வீசாவிற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, இந்தியா வியட்நாம், மியன்மார், கம்போடியா போன்ற நாடுகளின் பயணிகளுக்கு கட்டணமின்றி வீசா வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.