தனது அரசியலின் வாழ்வா சாவா போராட்டத்தில் வென்ற ரிஷாத் கண்கலங்கினார் !! முசலி A.C.M.C. வசமானது

· · 972 Views

நேற்று நண்பகல் பன்னிரண்டு மணி வரைக்கும் தமக்கே வெற்றி என்ற மிதப்பில் கிடந்தார்கள் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள்.

 

 

டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம்களின் ஜென்ம விரோதியான சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் சூழ்ந்திருந்த சபையில் மிக்க பொறுமையோடு அமைச்சர் ரிசாத் பதியுதீனும் அமர்ந்திருந்தார். வாக்களிப்பு நடைபெற்றது.

 

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக சுபியான் ஆசிரியரும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இஷான் என்பவரும் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டார்கள்.

 

 

 

இருவருக்குமிடையே நடந்த வாக்களிப்பில் சுபியானுக்கு 09 வாக்குகளும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கு 06 வாக்குகளும் கிடைத்தன.

 

 

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சுபியான் மாஸ்டர் முசலிப் பிரதேச சபையின் தவிசாளரானார்.

 

 

அதன் பின்னர் உதவித் தவிசாளர் தெரிவு நடைபெற்றது. இதில் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பைச் சேர்ந்த குலாஸ் என்பவரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்து வாக்களித்தது.

 

 

ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த முகுஸீன் ரைசுதீன் ஆசிரியர் 09-06 என்ற வாக்குகளின் அடிப்படையில் உதவித் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

 

 

வாக்களிப்பு முடிந்த பின்னர் அமைச்சர் ரிசாத் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டார்.

 

 

தனக்கெதிராக அரங்கேற்றப்பட்ட சதிகளும், தனது உள்ளத்தில் ஏற்படுத்தப்பட்ட சித்திரவதைகளும் அவரது ஞாபகத்துக்கு வந்தன.

 

 

அத்தனையையும் மீறி, அல்லாஹ் தனது பக்கம் இருப்பதையும் எண்ணிப் பார்த்தார்.

 

தன்னை அடக்க முடியாமல் உதவித் தவிசாளர் ரைசுதீனின் தோள் மீது முகம் புதைத்து அழுதார்.

 

 

இதனைப் பார்த்த அங்கிருந்தவர்களும், நேரலையைப் பார்த்துக் கொண்டிருந்த பல்லாயிரக் கணக்கானோரும் தமது தலைவனின் அழுகை கண்டு தாமும் அழுதனர்.

 

 

அது துன்பமும் இன்பமும் கலந்த அழுகை. சதிகள் தந்த வலியும் இறைவனின் கருணையை எண்ணிய ஆனந்தமும் கலந்து, கரைந்து வழிந்த கண்ணீர் அது.

 

 

Leave a Reply

Your email address will not be published.