தட்டை டுடே : ” தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய்களைப்” பயன்படுத்தி வழுக்கைத் தலையில் ஓரளவு முடி வளர வைக்கலாம்..!!!

· · 723 Views

வழுக்கையில் முடி வளரும் ஆனால் பலவீனமாக இருக்கும் ஒரு காற்றடித்தாலே பறந்துவிடும். தினமும் கண்டிப்பாக எண்ணெய் தடவவேண்டும்.  

தலைமுடியில் தடவுவதை விட வேர்க்கால்களில் தடவவேண்டும். இரவில் தூங்குவதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி எண்ணெயை எடுத்து மயிர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்து விடுங்கள். வழுக்கை தலையிலும் செய்தால் முடி வளர ஆரம்பிக்கும்.

235739-07oped

ஆனால் இனிமேல் ஷாம்பூ மற்றும் ஹேர் ஜெல்களை பயன்படுத்தக்கூடாது. 
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்த  வேண்டும்.  இல்லையேல் மூன்றையும் சரிசமமாக ஒன்றாக கலந்து கொண்டு பயன்படுத்தவும்.எனவே இந்த எண்ணெய் மற்றும் வெங்காயத்தை பயன்படுத்துங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முடி வளரும். 
இரும்புச்சத்தை அதிகரிக்கும் தேன், பேரீச்சை, கறிவேப்பிலை, முருங்கையை அதிகமாக உடலுக்கு சேர்த்திடுங்கள்.

சிறிய வெங்காயம் என்பது குழம்புக்கு அதிகமாக பயன்படுத்துவது.   சின்ன வெங்காயத்தை உரிக்கும் போதே கண்களில் அருவிபோல் நீர் வெளிவரும், இதற்கு காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர்தான்.  இந்த சல்பர் தான் முடிவளரவும் காரணமாக உள்ளது.

சிறிய வெங்காயத்தை அரைத்து முடியின் மயிர்க்கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பிக்கும்.  வாரத்திற்கு இரு நாட்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்.  தினமும் தலைக்குளிக்க வேண்டாம். 5 அல்லது 6 வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதை மைபோல் அரைத்து வைக்கவும்.
அரைத்த வெங்காயத்தை முடியின் வேர்க்கால்களில் படும்படியும். வழுக்கை விழுந்த இடத்திலும் தேய்க்க வேண்டும்.  உலர்ந்தவுடன் சீயக்காய் பவுடரில் கஞ்சி கலந்து தலைக்கு குளிக்கவும். இதனால் முடியில் ஈரப்பசை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்று பயன்படுத்திவர தலைமுடி வளர ஆரம்பிக்கும்.

சில எளிய பராமரிப்பு வழிகள்

*எண்ணெய் மசாஜ்: அனைத்து ஆண்களும் முடி உதிர்தலைத் தடுக்க முதலில்செய்ய வேண்டியது, வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக் கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பது தான். இதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
*தேங்காய் பால்: தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். எனவே தேங்காய்பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.
*கற்றாழை: முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர் தல் குறைந்து, முடிவேரில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.

*வேப்பிலை: வேப்பிலை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், தலையில் உள்ள அல்கலைன் சீராக இருப்பதோடு,பொடுகு மறைந்து முடி உதிர்தலும் நிறுத்தப்படும். மேலும் இந்த முறையை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதற்கு, வேப்பிலை பேஸ்டுடன், தேன் மற்றும் ஆலிவ் ஆயிலை கலந்து தேய்க்கலாம்.

*முட்டை: முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும், அடர்த்தியாகவும் வளர வேண்டு மெனில், இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 3 -4 முறை மேற் கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், முட்டை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்பத முள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.
*வெந்தயம்: 2-3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும். *அவகேடா: அவகேடா மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, தலையில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

*ஆரஞ்சு: தலையில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அப்போது அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, தலை மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். 

இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
*மருதாணி இலை: நல்ல கருமையான மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமெனில், மருதாணி இலை யை அரைத்து, முடியில் தடவி, மூன்று மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
*எலுமிச்சை சாறு: முடி பராமரிப்பில் அதிகம் பயன்படுவது எலுமிச்சை என்பது தெரிந்த விஷயம் தான். அத்தகைய எலுமிச்சையின் பாதியை தேங்காய் எண்ணெயில் பிழிந்து, தலையில் தடவி, 3-4 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். வேண்டுமெனில் இந்த முறையை இரவில் படுக்கும் போது செய்து, தலையில் ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொண்டு சுற்றிக் கொண்டு தூங்கி, காலையில் குளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.