“தங்க மகன் ” : பிரபல அமைச்சரின் தங்கக் கடத்தல் பற்றி CID விசாரணை..!! தம்பியும், புறக்கோட்டை வர்த்தகரும் சேர்ந்து

· · 529 Views

அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு தங்கம் கடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமைச்சரும் அவரது சகோதரரும் இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

gld

சட்டவிரோதமான முறையில் பிரபல அமைச்சரும் அவரது சகோதரரும் இந்தியாவிற்கு தங்கம் கடத்தும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணி கொள்ளை தொடர்பிலும் இந்த அமைச்சருக்கு எதிராகவும் அவரது சகோதரருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த அமைச்சர் தனது அமைச்சின் உத்தியோகபூர்வ வாகனங்களையும் கொண்டு தங்கம் கடத்த பயன்படுத்தி வருவதாகவும், கடல் மற்றும் வான் வழிகளில் கடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரிகள் சிலரும் இந்த கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளனர்.

தங்கத்தை கட்டுநாயக்க விமான நிலையம் வரையில் எடுத்துச் செல்வதற்கு அமைச்சின் உத்தியோகபூர்வ வாகனம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சின் உத்தியோகபூர்வ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு மிகவும் நுட்பமான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடுவோரிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒப்படைக்கப்படுகின்றது.

இவ்வாறு ஒப்படைக்கப்படும் தங்கம் இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

சில காலங்களுக்கு முன்னதாக இந்த அமைச்சரும் அவரது சகோதரரும் கடல் வழியாக 50 கிலோ தங்கத்தை இந்தியாவிற்கு கடத்த முயற்சித்த போது கடற்படையினர் அதனை முறியடித்திருந்தனர்.

இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டதன் மூலம் அமைச்சர், அவரது சகோதரர் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட புறக்கோட்டை கோடீஸ்வர வர்த்தகர் ஆகியோருக்கு பாரிய நட்டம் ஏற்பட்டிருந்தது.

இந்த நட்டத்தை ஈடு செய்வதற்காக குறித்த வர்த்தகர் புறக்கோட்டையில் தமக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றையும் விற்பனை செய்திருந்தார்.

அமைச்சர் அவரது சகோதரர் உள்ளிட்டவர்கள் திட்டமிட்ட வகையில் நாட்டின் தங்கத்தை வெளிநாட்டுக்கு இரகசியமாக கடத்துவதனால் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.