“டொலரின் தொடர்ந்த அதிகரிப்பினால் இலங்கை அரசின் கடன் 28,500 கோடி ரூபாவாக அதிகரிப்பு !! central bank கவலை

· · 412 Views

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்கம் காரணமாக நடப்பாண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் முழுமையான அரசாங்க கடன் 14170 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளது.

cb

இதில் 13300 கோடி ரூபாய் வெளிநாட்டு கடன் அதிகரித்துள்ள நிலையில் 870 கோடி ரூபாய் வெளிநாட்டு நாணய மதிப்பை மதிப்பீடு செய்யக்கூடிய உள் நாட்டு கடன் அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகின்றது.

டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி சில காலங்களாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது அமெரிக்க டொலரின் பெறுமதி 150 ரூபாவை கடந்துள்ளது.

கடந்த வருடத்தில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாய் வீழ்ச்சியடைந்திருந்தமையினால் இலங்கையின் முழுமையான அரசாங்க கடன் 28,500 கோடி ரூபாவாக அதிகரித்திருந்ததென இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.