டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் போது கட்டாய ஒருநாள்செயலமர்வு – அடுத்தாண்டு முதல் அமுலுக்கு வருகிறது

· · 503 Views
அடுத்த வருடம் முதல் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்கள் கட்டாய ஒருநாள் செயலமர்வில் கலந்துகொள்ள வேண்டும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வருடத்தில் இடம்பெற்றுள்ள விபத்துக்களில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்கள் மூலம் ஏற்பட்டவையாகும். கடந்த ஜனவரி முதல் இன்று வரையான காலப்பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து காரணமாக மாத்திரம் 1145 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 22 மரணங்கள் அதிகமாகும் எனவும் அவர் விளக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.