டிரம்பின் அறிவிப்பு பைத்தியக்காரத்தனமானது..!! ஐ.நா. பாதுகாப்பு சபை நிராகரிப்பு

· · 659 Views

தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்காவின் முடிவை ஐ.நா. நிராகரித்துள்ளது.

 

Steve Benson / Creators Syndicate

 

யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதத்தினருக்குமான நகரமாக விளங்கும் ஜெருசலேமை சொந்தம் கொண்டாடுவதில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.

 

 

 

இந்நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டெல் அவிவ் நகரில் செயற்பட்டு வரும் அமெரிக்க தூதகரத்தை ஜெருசலேமிற்கு மாற்ற உத்தரவிட்டார்.

 

 

 

இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

 

 

 

இதன்போது, மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி தொடர, அமெரிக்காவின் நடவடிக்கையை நிராகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

 

 

 

கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அமெரிக்காவின் முடிவு நிராகரிக்கப்பட்டது.

One comment

Leave a Reply

Your email address will not be published.