டாக்டர். ரிபாத் M.D. அவர்களே..நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்..? நீங்கள் உங்களை நேசிக்கும் புத்தளம் மக்களுக்கு செய்ய வேண்டியது என்ன..?

· · 617 Views
ஜமாத்  அரசியலின்    இரட்டை  முகமும் இரட்டைக் கொடியும்!
சென்ற மாத இறுதி பகுதியில் வெளியிடப்பட்ட NFGG, அதாவது இரட்டைக் கொடியின் போலி வேசம்  தொடர்பான  நீண்ட விமர்சன கட்டுரையின்  இரண்டாம் பகுதி இது. இதில் NFGG யின் புத்தள பிரவேசமும், அவர்களை நோக்கி அள்ளுண்டவர் கூட்டின் தலைவர் மதிப்பிக்குறிய வைத்தியர் இஸ்மாயில் ரிபாத் பற்றியும் பேசவுள்ளோம், கூடவே கடந்த 20.01.18ல்   ஸ்ரீ லங்கா ஜமாத்-ஏ- இஸ்லாமியின் புத்தம் கிளை நடத்திய அரசியல் வழிகாடல் (?) நிகழ்வும் இங்ககே கவனத்தில் கொள்ளப்படுகின்றது.
Image may contain: 2 people, people smiling, people sitting, motorcycle and outdoor
இது வைத்தியர் மீதான தனிப்பட்ட தாகுதல் அல்ல, அவர் சமூக முன்னேற்றம் கருதி அரசியலில் குதித்தமைக்கான காரணங்கள் தொடர்பாக அவருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும், பொதுவாக சமூக முன்னேற்றத்தில் அக்கரை கொண்டுள்ள அனைத்து ஊர் மக்களுக்குமான ஒரு கருத்து பகிர்வு.
வைத்தியர் ரிபாத் என்பர் பற்றிய என் ஆராய்வு இம்முறை புத்தளத்தில் அதி வேகமாக பரவிய ஆட்கொல்லி “டெங்கு” காய்ச்சலுடன் ஆரம்பமாகியது. அவரின் தன்நலமற்ற வைத்திய சேவை நம் ஊரையும் கடந்து அநுராதபுரம் வரை நீடித்ததாகவும், இந்த காய்ச்சல் புத்தளம் பிராதேசத்தை கிளிகொள்ளச் செய்த வேளை அனேகமாக 24/7 என்ற அடிப்படையில் ஓய்வு உளைச்சல் இன்றி அவர் சேவையாற்றியதாக சொல்லப்பட்ட  போது அதை மனதார அங்கீகரித்து வாழ்த்துக் கூறும் முகமாக கையை உயர்த்தி ஒரு “salute” அடிப்பதுடன் அவரின் கடமை உணர்வுக்கப்பால் தென்பட்ட மனிதாபிமானத்துக்கு போதுமான கூலியை இறைவனிடம் இருந்து அவர் பெற்றுக் கொள்வார் என்பதில் எந்த சந்தேசமும் இல்லை.
Image may contain: 3 people, indoor
ஆனால் இந்த அளவிட முடியாத அர்பணிப்பு வைத்தியரின் அரசியல் பிரவேசத்துக்கான ஒரு வகை “முதலீடாக” NFGG யோ அல்லது எந்த சமய/அரசியல் இயக்கமோ, அரசியல் கட்சியோ பாவிப்பதை வன்மையாக கண்டிக்கும் அதேவேளை வைத்தியரின் முடிவில் விழுந்த பாரிய அடியை நாம் இங்கே விமர்சிப்பது புத்தளம் அரசியலில் காலத்தின் கட்டாயமாகும்.
Image may contain: 3 people, people smiling, people standing and outdoor
வைத்தியரின் அரசியல் பிரவேசம் உத்தியோக பூர்வமாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட முன்னரே இது தொடர்பாக முகநூல் அரசியல் விமர்சகர்கள்(?) தங்களுக்குள் ஒரு சிறிய மல்யுத்தத்தை நடத்தி முடித்தார்கள்.  இதில் ஒரு சாரார் புத்தளம் வைத்திய துறையில் அரிதாக காணப்படுவோரில்;
“”” இந்த வைத்தியர் ஒருவர்,ஆகவே இவர் இத்துறைக்கே தனது முழு ஆளுமையையும் அர்பனிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க; அடுத்த பகுதியினர் இல்லை இவர் புத்தளம் உள்ளூர் அரசியலில் மெதுவாக கால் பதித்து, அடுத்து, அதற்கு அடுத்து என்று நீட்டி  ஆர்ஜண்டினாவின் சேகுவேரா, கியுபாவின் பிடல்காஸ்ட்ரோ போன்றோரை இவரின் தொழில் தகைமையுடன் ஒப்பிட்டு,  நட்டாடின் அரசியல் போக்கை (NFGG யின் பகற் கனவுக்கேற்ப) இவரால் மாற்ற முடியும்தானே என்ற கேள்வியை முன்னிறுத்தி  “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவராயினும் வானம் ஏறி வைகுண்டம் செல்லலாம்” என்ற முடிவுக்கு வந்தனர்.””””
Image may contain: 7 people, people smiling, people standing, beard and outdoor
சேகுவேரா, பிடல்காஸ்ட்ரோ என்போர் அந்னிய ஆட்சிக்கும், தென் அமெரிக்க கண்டம் தளுவிய முதலாளித்துவ ஏச்சலுக்கும் எதிராக அரசியல்-பொருளாதார முற்போக்கு கொள்கையான “சோசலிச” கொள்கையின் அடியில் செயற்பட்டவர்கள். அவர்களின் அரசியல் மாற்றச்செயல்பாட்டுச் சிந்தனை திடீரென்று இரவோடிரவாக பிறக்கவில்லை என்பதும், இவர்களின் அரசியல் பிரவேசம் என்பது மிக இளமையிலேயே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வோடு தம்மையும் இணைத்து அவர்களின் வாழ்வை அனுபவரீதியாக கண்டு அப்படி வாழ்ந்துபார்த்து, சர்வதேச அரசியல்-பொருளாதார மாற்றுச் சிந்தனைவாதிகளின் எழுத்துக்களால் கவரப்பட்டு அதை நோக்காக கொண்டு தம் வாழ்கையை அர்பனித்தனர் என்ற முக்கிய விடயங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு இவர்கள் வைத்தியர்கள் ஆகவே நம் உள்ளூர் வைத்தியர் ஏன் அவர்கள் போல் ஆக முடியாது என்ற ஒரு அரைகுறை (half knowledge) அறிவுடன் கருத்துக் கூறியவர்கள் நம் நாட்டு/ஊர் சராசரி வாக்காளர்களை விடவும் பிற்போக்கானவர்களாகவே என்னால் உணரமுடிகின்றது.
நம் உள்ளூர் வைத்தியரை மேற்சொன்ன சோஸலிச புரட்சியாளர்களின் அரசியல் வாழ்க்கையுடன் ஒப்பிடுவது சூரிய ஒழியையும், குப்பி விளக்கின் ஒளியையும் ஒப்பிட எடுக்கும் முயற்சியாகும் என்ற என்வாதத்திற்கான உறுதியான காரணங்கள் நம் முன்னே மலை போல் குவிந்து கிடந்தாலும் இவர்களுக்கு நான் சுட்டிக் காட்டும் ஒரு உள்நாட்டு உதாரணம்தான்  ரோஹன விஜே வீர என்ற JVP யின் முன்னைநாள் தலைவன். இவரும் கூட சோசலிச கொள்கையால் கவரப்பட்டவர், இவர் சேகுவேரா போலில்லாமல் சோஷலிச நாடான முன்னை நாள் ரஸ்சிய சோசலிச குடியரசில்  தொழிலுக்காக வைத்தியத்தியமும், சமூக, அரசியல், பொருளாதார மாற்றத்துக்கக அரசியலும் கற்றவர், இவர் ஒன்றல்ல இரண்டு முறை இலங்கை அரசியல் கலாச்சாரத்தை மாற்ற ஆயுதம் எடுத்து இலட்சக்கணக்கான இளைஞர், யுவதிகளை பலிகொடுத்தார். அதில் பெரும்பான்மை சிங்களவர் என்றாலும் தமிழ், சோனக(முஸ்லிம்) இளைஞர், யுவதிகளும் சாவைத் தளுவிக்கொண்டது ஒரு சிறு வரலாறு. ஆகவே நம்மவர் வைத்தியர் என்பதற்காக அவர் சமூக ( நகரசபை செயற்பாட்டு) மாற்றம்(?) பற்றி ஏதோ ஒரு உந்துதலில் பேசுகிறார் என்பதற்காக அவர் புத்தள சமூகத்தின் மீட்பாளர் என்று யாரும் கனவு காண்பார்களாயின் அவர்களுக்கு என் முன்கூட்டிய ஆழ்ந்த அனுதாபங்கள்.
Image may contain: 1 person, sitting and indoor
சரி இனி இந்த வைத்தியர் ரிபாத் தன்னை பற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். கடந்த மாத முற்பகுதியில் வைத்தியர் தன் அரசியல் பிரவேசம் சம்பந்தமாக மக்களுக்கு விளக்கம் அளிக்கும் ஒரு கானொளியில்  தனக்கிருக்கும் செயற்திறன்(potential) னில் ஒரு 10% தான் இந்த வைத்திய துறையில் தன்னால் ஈடுபடுத்த முடியுமாக இருக்கின்றதென்றும் அவரிடமுள்ள மிகுதி 90% செயற்திறனை சரியாக பாய்ச்ச இந்த அரசியல் களத்தில் இறங்கியுள்ளதாகவும் கூறியபோது வைத்தியரின் அரசியல் தெளிவின்மை பளிச்சென வெளிச்சத்துக்கு வந்தது. இதை நியாயப்படுத்த வைத்தியர் சொன்ன அடுத்த விடயம் அவரை இன்னும் சற்று கீழிறக்கவிட்டதாகவே எனக்குப் படுகின்றது. அதாவது புத்தளம் தள வைத்தியசாலைக்கு என்னனென்ன செய்யவேண்டும் என்ற விளக்கமான திட்டம் தன்னிடம் உள்ளதாகவும் எந்த அரசியல்வாதியும் தன்னை அணுகி அது பற்றி கேட்காததால் அது பற்றி தானும் அவர்களுக்கு எத்திவைக்கவில்லை என்றார்.
வைத்தியரின் ஆளுமை பலவீனம் இங்கிருந்து ஆரம்பிக்கின்றது என்பது எனது நோக்கு.  அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு ஆயிரம் விடயங்கள் கையில் இருக்கும் அவற்றில் எது முதன்மை பெறவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் அது சம்பந்தப்பட்டோர் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பர்.
Image may contain: 4 people, people smiling, people standing
எனவே அரசியல்வாதிகள் தன்னிடம் வந்து புத்தளம் வைத்தியசாலையின் பிரச்சினைகள் என்ன , அங்கு என்னனென்ன தேவைகள் உள்ளன, அவற்றில் எது முதன்மை பெறவேண்டும்   என்று கேட்கவில்லை என்பதற்காக இந்த பிரச்சினைகள் தொடர்பாக நானாக அரசியல்வாதிகளிடம் சென்று முறையிடமாட்டேன், அவைகளை பெற்றுக் கொள்ள அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டேன். ஆகவே இந்த பிரச்சினைகளில் ஏதாவது ஒன்றை சரியாக செய்து முடிக்க அதிகாரம் இல்லாத(?) நகர சபைக்கு தான் வந்து அதற்கு அப்பால் இந்த பிரதேச அரசியல், நாட்டு அரசியல் என்று குதித்து போகும் இடமெல்லாம வெற்றிவாகை சூடி இறுதியில் சுகாதார மந்திரியாக வந்து  இந்த பிரச்சினைகளை எல்லாம் முடிவுக்கு கொண்டுவருவேன் என கனவு காண்பது வைத்தியரின் உரிமை.
ஆனால் தன்னிடம் அரசியல்வாதிகள் யாரும் வந்து இவை பற்றி கதைக்காததால் தம் பாரிய திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளேன் என்பது மக்களின் உரிமையில் நேரடியாக கைவைக்கும் முயற்சி மாத்திரமல்ல தன் சுயகெளரவதிற்காக மக்களின் உரிமையை மறுக்கும் அராஜகப்போக்காகும். சிறிய அதிகாரம் கிடைக்க முன்னே இப்படி என்றால் தற்செயலாக அதிகாரம் இடைத்தால், என்ற கேள்வியை மக்களின் முடிவிற்கு விட்டுவிடுகின்றேன்.
Image may contain: 2 people, people smiling, people standing
மேலும் அதே கானொளியில் வைத்தியர் புத்தளம் தள வைத்தியசாலைக்கு(Base Hospital)   ஒரு ” அவசர சிகிச்சை பிரிவு” (Emergency Unit) தேவைப்படுவதாகவும் அதை தன் அரசியல் பிரவேசத்தால் பெற்றுத்தருவதாக, அப்படி பெற்றுதர முடியும் என நம்பும் அப்பாவிதனத்தையும் வெளிப்படுத்தினார்.
 ஆக எது எது நகரசபை கட்டளை சட்ட(Urban Council Ordinance)த்திற்கு உட்பட்டது எது எது நாட்டின் ஏனைய சட்டங்கள் ஊடாக நடத்தி முடிக்கப்பட வேண்டியவை, அவை எந்தெந்த அமைச்சின் கீழ் வருகின்றது என்ற தெளிவின்றி புத்தளம் நகரின் பிரச்சினைகள் அனைத்தையும் வெறுமனே நகர சபையை கைப்பற்றுவதின் மூலம் சாதிக்கலாம் என்பது மடமை. இப்படியே புத்தளம் நகர சபை நிர்வாக எல்லைக்குள் இருக்கும் இணங்காணப்பட்ட பிரச்சினைகளும் அவைகளைத் தீர்க்கும் பாரிய திட்டங்கள் எல்லாமே மாகாண சபை, பாராளுமன்றம் என்ற பெரிய நிர்வாக அமைப்புகளுடனும் நேரடியாக சம்பந்தப்பட்ட விடயங்கள் என்பதை வைத்தியரும் அவரின் NFGG குழுவும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
Image may contain: 1 person, smiling, standing and outdoor
ஆகவே வைத்தியரின் 90% pontential லை சரியாக பயன்படுத்த இதோ சில ஆலோசனைகள்: 
புத்தளம் சமூகம் என்பது அனேகமாக  பெளதிக ரீதியாக ஒரு நோயுற்ற சமூகம், அடுத்த தலைமுறை (சுமார் 35 வருட காலம்) இதன் தாக்கம் மிக தெளிவாக தெரியும் என்பதோடு துறைசார்ந்தோர் இதில் இப்போதே கவனம் செலுத்தத் தவறினால் அந்த ஆபத்தில் இருந்து தப்பமுடியாது என்பது எனது உறுதியான முடிவு. இந்த விடயத்தில் தலையிட்டு தேவையான மாற்றங்களை கொண்டுவர வைத்தியர் ரிபாத் அவர்கள் மிகவும் பொருத்தமானவர்.
இன்று புத்தளத்தில் என்றும் இல்லாதவாறு நீரழிவு நோய்(diabetes),இரத்தத்தில் காணப்படும் கூடிய கொழுப்பு(cholesterol), என்பவறின் மூலமும், இந்த நோய்களினால் ஏற்படும் பக்க விளைவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் அதிகம் காணப்பட, காலத்துக்கு காலம் ஏற்படும் “டெங்கு” போன்ற நுளம்பினால் பரவும் நோய்கள் என்று நாம் தெரிந்து கொண்டே நோய் கொண்ட சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். இதற்கான அடிப்படை காரணம் நமது உணவு பழக்க வழக்கம் என்பதோடு இவை சம்பந்தமான விழிப்புணர்கள் ஏற்படுத்தமப்படாமை அல்லது மிக மிக மிக குறைந்த அளவில் காணப்படுவதாலும், சுய சுத்தம்- சுகாதாரம், சூழல் சுத்தம்-சுகாதாரம் தொடர்பாக போதியளவு முக்தியத்துவம் கொடுக்கப்படாமையினால் புத்தளம் நகரில் காணப்படும்  “ஏ” தர (Type A) தள வைத்தியசாலை ( base hospital) பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் திண்டாடுகின்றது.  இந்த வைத்தியசாலை இன்னும் பல அடிப்படை வசதிகள் இல்லாமல் காணப்படும் போது இந்த வைத்தியரின் அரசியல் பிரவேசத்தின் முக்கிய காரணி இந்த வைத்தியசாலையில்  “அவசர சிகிச்சை பிரிவு” ஒன்றை ஏற்படுத்துவது எனும் போது நாம் புருவத்தை உயர்த்தி அப்படியா என்று கேட்கத் தோன்றுகிறது.
புத்தளத்துதின் வட/வடமேல் பகுதியை அடிப்படையாக் கொண்டு இன்னுமொரு சிறிய வைத்திசாலை அல்லது மருந்தகம்(dispensery) தேவைப்படுவது போல் நம் ஊருக்கு இன்னும்மொரு முஸ்லீம்களுக்கான அடக்கதளமும் (cemetery) அல்லது தூர பிரதேசங்களில் இருந்து இப்போது இருக்கும் அடக்கத்தளத்துக்கு உடலை மரியாதையாகவும், கவனமாகவும் கொண்டுவர ஒரு மோட்டார் வாகனம் அல்லது ஒரு நல்லமுறையில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு குதிரை வண்டியை கூட நம் புத்தளம் அரசியல்வாதிகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து நம்மூருக்கு இன்னும் வழங்கவில்லை.
 (அகெளரவமாகவும், அசெளகரியமாகவும் இறந்த உடலை நால்வர் தூக்கிக் கொண்டு ஓடுவதை பார்க்கும் போது, அது ஓடுவோரின் வேலை அல்ல, இந்த இறந்த உடலே இழுத்துக் கொண்டு ஓடுவதாக பல அஸ்ஷெய்க்குகள் வியாக்கியானம் தருவதும் பரிதாபத்துக்கான கதை. அதே போல் இப்படி தூக்கி கொண்டு ஓடும் உடல் இதுவரை கீழே விழவில்லை என்பது வெறும் அதிஸ்டமே அல்லாமல் எப்போதுமே அது கிழே விளாது என்பதற்கு இது ஒரு நிகழ்தகவு அல்ல என்பது நம்மூரில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய இன்னுமொரு விடயம்)  இந்த இரண்டும் அவசர சிகிச்சை பிரிவைவிட மிக சீக்கிரத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாய தேவைகள் இதில் இந்த NFGG கூடிய கவனம் செலுத்தலாம்.
மேலும், எல்லா பாடசாலைகளிலும் உணவு பழக்க வழக்க விழிப்புணர்வு வாராந்த அல்லது மாதாந்த நிகழ்ச்சிகளை இந்த வைத்தியர் தலைமையில் செய்யலாம். கூடவே இந்த கூட்டிலுள்ள பெண் சமூக சேவையாளர்கள், ஆசிரியர்கள் என்போர் மாணவர்களிடையே ஒரு நாட்டின் நற்பிரஜையாக (good citizen) இருப்பது எப்படி, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை கட்டி எழுப்புதல், சகவாழ்வு, ஏனய சமய, கலாச்சார விடயங்களை மதிப்பது(respect)  அல்லது சகிதுக் கொள்வது( tolerance), மனித உரிமை(human right) என்ற இன்று உலகலாவிய ரீதியிலே முக்கியமாகத் தேவைப்படும் விடயங்களை சரியான நிண்டகால திட்டத்துடன்  செயல்படுத்த முயற்சிக்கலாம். இது போன்ற இன்னோரன்ன விடயங்கள் நம் சமூகத்தில் அக்கரை காட்டப்படாமல் இருக்கின்றன.
ஆகவேதான் உள்நாட்டிலும் சரி, தொழில் நிமித்தம் மேலே நாடுகளில் வாழும் நம்மவர் அனேகருக்கு இவை கஸ்டமான விடயங்களாகின்றன.  கிராம மயமாக்கப்பட்டுள்ள இந்த உலகத்தில் நாளை நம் இன்றைய சிறுவர்கள் காத்திரமான பங்கை வகிக்கவேண்டுமாயின்  அதற்கான அடிப்படி அறிவு பாடசாலை மட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டுமே இல்லாமல், ஊழல் அற்ற உள்ளூராட்சி என்ற கோசத்துடன் ஊழலுக்கும், சட்ட ரீதியான விடயங்களை செய்து முடிக்கவே லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்,  வினைத்திறன் அற்ற செயற்பாடு கலாச்சாரத்துக்கும் நெடுங்காலம் பழக்கப்பட்ட வாக்காளர்களுக்கு “முஸ்லீம்” சாயம் பூசப்பட எந்த கட்சிக்குமல்ல, குளம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கும் இந்த சந்தர்ப்பவாத               NFGG க்கும் முடியாத காரியம் என்பதை இங்கு உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். ஆகவே “முஸ்லீம்” சாயம் பூசப்பட கட்சிகள் போன்று இந்த NFGG யும் நிராகரிக்கப்பட வேண்டும்.
சென்ற ஆக்கத்தின் கருப்பொருள் இந்த NFGG க்கும் SLJIக்கும் உள்ள தொடர்பு.  அன்று 20.01.18ல் புத்தளத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா ஜம்மத்-ஏ- இஸ்லாமி புத்தளம் கிளையினரின் அரசியல் வழிகாட்டல்(?) கூட்டத்தில் யாருமே இந்த தொடர்பு பற்றி சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மறுதழிக்கவில்லை.
 யாரும், எந்த சமய அமைப்பினரும் அரசியலில் ஈடுபடலாம் என்ற பொதுவான விடயமே சொல்லப்பட்டது. இதில் நாமும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை.  நாம் சொல்லவருவது நீங்கள் ஏன் பின் கதவால் அரசியலுக்குள் புகுந்து இலங்கையை, இந்த ஜமாத்தின் கொள்கைகள் பரவிக்காணப்படும் பாகிஸ்தான், வங்காளதேசம் போன்று அல்லது  தீவிரவாதம் பரவியுள்ள அப்கானிஸ்தான் போன்ற ஒரு கொந்தளிக்கும் பிரதேசத்தை இங்கு ஏற்படுத்த அடித்தளமிட முயற்சிக்கின்றீகள் என்ற விடயத்தை  வெளிப்படையாக பேசுங்கள் என்பதுவுமே,  அப்படியானால் மாதிரமே மக்கள் தீர்க்கமான் தீர்மானம் ஒன்றை எடுக்க உதவியாக் இருக்கும். அதுவரை இந்த முயற்சியில் ஈடுபடும் எந்த கட்சியையும், அமைப்பையும், சமய இயக்கத்தையும் நாம் தெரிந்தோ, தெரியாமலோ ஆதரிக்கக் கூடாது என்பதே எமது வாதம்.
இந்த ஜமாத்தின் புத்தளம் கிளை தலைவர் பேசும் போது தமது ஜமாத் எந்த ஒரு அரசியல் கட்சியை ஆதரித்தும் இந்த நிகழ்வை செய்யவில்லை என்ற ஒரு விடயத்தை சொல்லி அதன் மூலம் தமக்கும் இந்த NFGG க்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்க முற்பட்டார். எமது குற்றச்சாட்டுக்கு இந்த ஒரு வசன பதில் திருப்திகரமானதாக இல்லை. காரணம் இந்த ஜமாத் தலைவர் NFGG யை 2014/2015ல்  போற்றிப்புகழ்ந்து எழுதிய தமிழ் கட்டுரையோ அல்லது அதை ஆங்கில மொழிபெயர்ப்பு செய்த இந்த ஜமாத்தை சேர்ந்த வைத்தியர் ரிபாய் நளிமீயின் செயலுக்கான காரணம் என்னவென்றோ இந்த புத்தளம் கிளை சொல்லவில்லை.  ஓரு வேளை அதற்கும் தமது கிளைக்கும் எந்த சம்பந்தமுக் இல்லை என்றால் அதையாவது சொல்லி இருக்கலாம்.
மேலும் இந்த ஜமாத் கடந்த 50 ஆண்டுகளாக புத்தளத்தில் இயங்குவதாக பெருமைப்பட்ட  இந்த சமய இயக்க கிளைத்தலைவர்  சொன்ன  இந்த அரை நூற்றாண்டு காலத்தில் எத்தனை சமூக பிரச்சினைகளுக்கு மேடை போட்டு வழிகாட்டியது இந்த இயக்கம் என்பதை சொல்ல மறந்துவிட்டார். 1976ல் சிங்கள- முஸ்லீம் இனமுறுகல் ஏற்பட்ட போது, வெள்ள அசெளகரியங்கள் பல ஏற்பட்ட போது, புத்தளத்தில் வாழும் வட பகுதி முஸ்லீம்களுக்கும் உள்ளூர் முஸ்லீம்களுக்கும் சலசலப்பு ஏற்பட்ட போது ஏன் மேடையமைத்து வழிகாட்டவில்லை, நுரைச்சோலை அனல் மிசார அமைப்பின் போது ஏன் மேடை போட்டு வழிகாட்டவில்லை, நம் பிரதேசம் “கிறீஸ் யக்காவால்” பயமுறுத்தப்பட்ட போது அது தொகர்பாக மேடை போட்டு மக்களுக்கு ஏன் வழிகாட்டவில்லை? ஜம்மியதுல் உலமா ஜெனிவா சென்ற போது அதன் சரி பிழை பற்றி ஏன் மேடை போட்டு பல்லினம் வாழும் புத்தளத்துக்கு வழிகாட்டவில்லை, கடந்த “டெங்கு” பிரச்சினையின் போது ஏன் மேடை போட்டு வழி காட்டவிலை, புத்தளதில் போதை பொருள் ஊடான சாவுகள் அல்லது அதை தடுக்க போராடியவர்களின் இறப்பு தொடர்பாக மேடை போட்டு மக்களுக்கு வழிகாட்டவில்லை. செளதியில் கழுத்தறுக்கப்பட்ட மூதூரைச் சேர்ந்த செல்வி. நபீக் போன்று நூற்றுக் கணக்கான புத்தள பிரதேச ஒளம் பெண்கள் செளதியில் வேலை செய்கின்றார்கள் அவர்களுக்கான கவனயீர்ப்பு ஏன் மேடை போட்டு செய்யப்படவில்லை.   முஸ்லீம் விவாக விவாகரத்து திருத்தச் சட்டம் சம்பந்தமாக ஏன் மக்களுக்கு மேடை போட்டு வழிகாட்டவில்லை ,
திருத்த குழுவிற்கு ஏன் பரிந்துரைகள் வழங்கவில்லை, இந்த அரசாங்கதின் அரசியலமைப்பு திருத்த ஆலோசனைகள் ஊர் ஊராக பெறப்பட்ட போது ஆலோசனைகள் வழங்கப்பட்டதா? இதன் முக்கியத்துவம் தொடர்பாக மேடை அமைத்து மக்களுக்க வழிகாட்டப்பட்டதா? அறுவைக்காட்டுக்கு மீத்தொட்டமுல்ல குப்பை கொண்டுவரப்படபோவதை எதிர்த்து அல்லது ஆதரித்து மேடை போட்டு மக்களுக்கு வழிகாட்டப்பட்டதா?
முஸ்லீம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் திருத்தச்சட்டத்திற்கு பாராளுமன்றில் கை உயர்த்திவிட்டு, தவறு செய்துவிட்டோம் இறைவனுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்று  அழுதபோது அதன் சரி பிழை தொடர்பாக அல்லது அந்த தேர்தல் திருத்த சட்டத்தின் சாதக பாதகங்கள் தொடர்பாக மேடை அமைத்து மக்களுக்கு வழிகாட்டப்பட்டதா? பெண் உரிமைபற்றி கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை மேடை போட்டு வழிகாட்டினீர்கள்? ஜாமத்தின் மத்திய குழு புத்தள கிளைக்கு வழிகாட்டல் மேடையமைக்க அனுமதி வழங்கமுன் சாய்ந்தமருதுவே இப்போதைய நிலையில் அரசியல் வழிகாட்டல் தேவைப்படும் இடம் என்பதை ஏன் மறந்தீர்கள்?
இவைகளை விடவும் தேர்தலில் குதிக்காத உங்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனம் விடுவதற்கான காரணம் என்ன? இவைகளுக்காக செலவிடப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது? ஏன் அந்த பணம் ஏதாவது சமூகநலன் சார்ந்த திட்டங்களுக்கு பாவிக்கப்படவிலை? எல்லா கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கின்றார்கள் ஆகவே உங்கள் வட்டாரங்களில் நல்லவர்களை தெரிவு செய்யுங்கள்  என்ற ஒரு விடயத்தை சொல்ல இவ்வளவு பணச்செலவு செய்ய வேண்டுமா? இப்படி எல்லாம் நிலைமை இருக்கும் போது இந்த ஜமாத்திற்கு அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று இல்லை என்று தெளிவாக மக்களுக்கு சொல்ல முடியுமா? இப்படி  கேள்விகள் குவித்துக் கொண்டே செல்கின்றன.
அனைத்து அரசியல் வாதிகளும் கெட்டவர்கள், கொள்ளைக்காரர்கள், சமூக நல நோக்கற்றவகள் ஆகவே நல்லவர்களாகிய NFGG க்கு மாத்திரமே வாக்களியுங்கள் என்று சொல்ல, நீங்களோ மேடை அமைத்து நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லும் போது உங்கள் அரசியல் இலாப நோக்கும், அரசியல் செயல்பாடும் மக்களுக்கு பளிச்சென தெரிகின்றது. உங்கள் பின் கதவு அரசியல் பிரவேச முயற்சியின் முட்டாள் தனங்கள் இலங்கையில் பல தருணங்களில் நடந்தேறி இருந்ததையும் மக்கள் மறந்துவிடவில்லை. அதில் ஒன்றுதான் பிரச்சினையின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை தமிழில் சண்டையிட்ட நீங்கள் பிரச்சினையின் பிற்பாடு “பெண்கள் மாத்திரம்” ஆர்ப்பாட்ட நிகழ்வை தெளஹீத் ஜமாதினருக்கு எதிராக ஏற்பாடுசெய்து அதில் “சிங்கள” மொழியில் மாத்திரம் பாதகைகள் ஏந்தச்செய்தது அரசியல் இலாபம் இல்லாத மக்கள் விழிப்புணர்/வழிகாட்டல் நிகழ்வா?
ஆகவே உங்களின் சமய கடைமைகளில் மாத்திரம் நீங்கள் கவனம் செலுத்திக் கொண்டு, அரசியல் செய்வோருக்கு அவர்களின் பணிசெய்ய  விட்டுவிட்டு நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். சயம் என்பது அரசியலும் உள்ளடக்கப்பட ஒன்று ஆகவே அரசியல் செய்யும் உரிமை உங்களுக்கும் உண்டென்றால் அதை நாம் மறுக்கவில்லை. அப்படியானால் BBS அமைப்பு போன்று  தைரியமாக வெளியே வாருங்கள் அப்போது சரியான பாடம் எதுவோ அதை உங்களுக்கு வாக்காளர்களாகிய நாம் போதிப்போம்.
முஹம்மது SR நிஸ்த்தார்.

2 comments

  1. உனக்கு இப்போது எத்தனை வயது? ஒரு எழுபது இருக்குமா? அந்த வயதுக்குள்ள முதிர்ச்சியை எங்கே நீ தொலைத்தாய்?

    வைத்தியர் ஊருக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் உன் வயிறு ஏன் பற்றி எரிகின்றது? உன் இத்தனை வயதில் நீ ஊருக்கு என்ன செய்தாய்? வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழினிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? மானங்கெட்டவனே!

    NFGG க்கு வேண்டாம் – சரி, SLMC, ACMC க்கும் வேண்டாம் – சரி – உன் கீழ்த்தரப் பார்வையில் அவை முஸ்லிம் சாயம் பூசப்பட்ட அம்மணங்கள். அப்போ யாருக்கு நாங்கள் ஓட்டுப்போட நீ சொல்கிறாய்? குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது உன் கல்வியறிவில்லாத கயமைக்குணம், அடிவருடித்தனம்.

    கடைசியாக, உன் உளறலுக்கு அங்கால், நீ ‘எழுதிய’ பிறகு, எடுத்த வாந்தியை ஒரு தரம் நீயே வாசித்துப்பார். உன் எழுத்துநடை ஆகவே கேவலம்.

Leave a Reply

Your email address will not be published.