ஞானசார தேரோவை ஒளித்து வைத்திருப்பது அரசாங்கமே !! இப்தார் நிகழ்வில் மகிந்த ராஜபக்ஷ அதிரடிக் குற்றச்சாட்டு

· · 320 Views

இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்தி நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு புதிய சட்­டங்கள் அவ­சி­ய­மில்லை. அமு­லி­லுள்ள சட்ட ஏற்­பா­டு­களின் பிர­காரம் அதனைச் செய்ய முடியும். மேலும் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை அர­சாங்­கமே மறைத்து வைத்­துள்­ள­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ ­பக் ஷ ஏற்­பா­டு­செய்த இப்தார் நிகழ்வு நேற்று முன்­தினம் இரவு கொழும்­பி­லுள்ள அவ­ரது இல்­லத்தில் நடை­பெற்­றது. அங்கு ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இத­னைத் தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
இன­வா­தத்தைத் தூண்டும் அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு மேல­திக அதி­காரம் வழங்­கப்­படும் என பிர­தமர் ரணில் விக்­க­ர­ம­சிங்க குறிப்­பிட்­டுள்ளார். எனினும் அவ்­வாறு பொலி­ஸா­ருக்கு மேல­திக அதி­காரம் வழங்­கப்­பட வேண்­டிய அவ­சியம் இல்லை.
ஏனெனில் பொலி­ஸா­ருக்கு தற்­போ­தைக்கு  வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தின் மூலம் இன­வா­தத்தை தூண்டும் அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்க முடியும். ஆகவே  இன­வாத, மத­வாத செயற்­பா­டு­களை பொலி­ஸா­ரினால் கட்­டுப்­ப­டுத்த முடியும். புதி­தாக அதி­காரம் வழங்­கப்­பட வேண்­டிய தேவை இல்லை.
இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்தி நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு புதிய சட்­டங்­களும் அவ­சி­ய­மில்லை. அமு­லி­லுள்ள சட்ட ஏற்­பா­டுகள் மூலம் அத னைச் செய்ய முடியும். எனினும் நாட்டில் சட்டம் ஒழுங்கை பலப்­ப­டுத்­து­வ­தனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அர­சாங்கம் புதிய சட்­ட­மூ­லங்­களை முன்வைத் தால் அதற்கு நாம் ஆத­ரவு வழங்­குவோம்.
இன­வாத மத­வாத செயற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்கம் வழி­விட்டு செயற்­ப­டு­கி­றது. ஆன­போ­திலும் பொது­பல சேனா அமை ப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரரின் விட­யத்தில் அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்கள் யதார்த்­தத்­திற்குப் புறம்­பாக எம்­மீது குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர். ஞான­சார தேரரை அர­சாங்­கமே மறைத்து வைத்­துள்­ளது.
எனினும் அர­சாங்­கத்­தினால் விடயம் ஒன்­றுக்கு உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு இய­லாமல் போகும்­போது எம்­மீது குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கி­றது. இது வழ­மை­யாக நிகழ்ந்து வரு­கி­றது. அது தொடர்பில் நாம் கவ­லை­ய­டை­கிறோம்.
அத்­துடன் ஞான­சார தேரரை கைதுசெய்­ வ­தாக இல்லையா என்பது வேறு பிரச் சினை. இருந்தபோதிலும் நாட்டில் எழு கின்ற பிரச்சினைகளில் அரசாங்கம் உரிய முறையில் தலையிட்டு தீர்த்துவைக்க வேண் டும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் அவ்வரசாங்கத்தால் எவ்விதப் பிரயோசன மும் இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published.