“ஞானசாரரைக் கைது செய்வது மிகவும் கடினம்” அரசாங்கம் கூறுகிறது – பொலீஸ் நிலையங்களை மூடி விட வேண்டியதுதான்

· · 408 Views

கடந்த ஆட்சியின் போது வடக்கில் இளைஞர்கள் கடத்தப்பட்டது போன்று இப்போது நடைபெறுவது இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

 

 

 

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

 

மேலும், கடந்த ஆட்சியில் இடம்பெற்ற முறைகேடான சம்பவங்களைப் போன்று இப்போதைய ஆட்சியில் நடைபெறவில்லை. பல விடயங்களுக்குத் தீர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

 

அதேபோன்று வடக்கில் இப்போது கடத்தல்கள் இடம்பெறவில்லை. அங்குள்ள தாய்மார்களிடம் கேட்டுப்பாருங்கள் உண்மைகள் தெரியவரும்.

 

ஞானசாரரரைப் போன்று ஒளிந்துள்ளவர்களைக் கைது செய்வது மிகவும் கடினம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

 

கடந்த கால ஆட்சியில் அளுத்கமை பிரதேசத்தில் இடம்பெற்ற இனக்கலவரம் குறித்து இப்போது விசாரணைகள் செய்யப்பட்டுக் கொண்டு வருகின்றன. ஆனால் இது தொடர்பில் அப்போதைய ஆட்சியில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

 

அண்மையில் மகரகமையில் இடம்பெற்ற முஸ்லிம் கடை எரிப்புச் சம்பவங்கள் தொடர்பிலும் கைதுகள் நடைபெற்றுள்ளன.

 

ஞானசாரரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.