ஜேர்மன் , ஜப்பான், அமெரிக்க கார்களை பின் தள்ளி தென் கொரியாவின் “கியா” நிறுவனம் உலகின் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனமாக தெரிவு

· · 434 Views

மோட்டார் வாகனங்களுக்கானஅமெரிக்கதரப்படுத்தல் வரிசையில் Kia வாகனங்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. மோட்டார்உற்பத்திப் பிரிவில் உள்ள உலகப் புகழ் பெற்ற முன்னணி முத்திரைகொண்ட உற்பத்திகளின் நடுவே இந்தமுதல் இடம் கிடைத்துள்ளது.

 

 

ஜே.டி பவர் இனிஷல் குவாலிட்டி ஸ்டடி (IQS) என்ற தரப்படுத்தலியே Kia வுக்குமுதலிடம் கிடைத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவதுதடவையாக இந்தகீர்த்திமிக்கதரவரிசையில் Kia வுக்குமுதலிடம் கிடைத்துள்ளது.

 

 

அமெரிக்கசந்தைப்படுத்தல் ஆராய்ச்சி நிறுவனமான IQS வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் காணப்படும் முதலாவது 90 நாட்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தரப்படுத்தலுக்கான மதிப்பீட்டைசெய்கின்றது. வாகனத்தை செலுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகள் இயந்திரப் பிரச்சினை என பலவிடயங்கள் இந்தஆய்வின் போதுகருத்தில் கொள்ளப்படுகின்றன. ஆய்வின் போது 100 வாகனங்களில் காணப்படும் ஒட்டுமொத்தபிரச்சினைகள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. இதில் ஆகக் குறைந்தபிரதிபலிப்புக்கள் கூடியதரத்தைசுட்டிக்காட்டிநிற்கின்றன.

 

 

IQS 2017 தரப்படுத்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் ´20 வருடகாலஆய்வில் Kia ஏனைய உற்பத்திகளையும் விடமிகச் சிறந்த செயற்பாட்டை வெளிப்படுத்திஉள்ளது. ஐந்து பிரிவுகளுக்கானவிருதை அது வென்றுள்ளது. இந்தஆண்டுக்கானஆய்வில் ஆகக் கூடுதலானவிருதுகளை வென்றுள்ள உற்பத்தியாகவும் அதுகாணப்படுகின்றது´ எனத் தெரிவித்துள்ளது.

 

 

Kia வின் 2017க்கான 72 புள்ளிகள் இரண்டாம் இடத்தை வென்றுள்ளஉற்பத்தியை விட ஐந்துபுள்ளி அதிகமானதாகும். அதேபோல் கடந்தஆண்டில் அதுபெற்ற சொந்தபுள்ளிகளிலும் பார்க்க 11 புள்ளிகள் அதிகமானதாகும். Soul(அடக்கமானபல்நோக்குவாகனம்) Forte (அடக்கம்) Cadenza (பெரியகார்) Niro (சிறியவிளையாட்டுரக) Sorento (நடுத்தரவிளையாட்டுரக) என ஐந்து ரகங்களில் விருதுகள் வெல்லப்பட்டுள்ளன. இவை எல்லாமே இவற்றுக்கானபிரிவில் முன்னணி இடம் பிடித்துள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இந்தஎல்லாமாதிரிகளிலும் மிகக் குறைவானபிரச்சினைகளைக் கொண்டதாக கண்டென்ஸா காணப்படுகின்றது.

 

 

 

26 பிரிவுகளில் 243 வாகனமாதிரிகளைஉள்ளடக்கி 77415 பேரிடம் இருந்துபெற்றுக் கொண்டகருத்துக்களின் அடிப்படையில் 2017க்கான IQSமதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. வாகனஉரிமையாளர்கள் தெரிவித்தவிரிவானகுறைபாடுகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. மெர்சடஸ் Mercedes Benz, BMW, Jaguar>Audi, Cadillac, Land Rover, Volvo மற்றும் Porsche என 32 முன்னணி மாதிரிகள் இந்தமதிப்பீட்டின் போதுகவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன

Leave a Reply

Your email address will not be published.