ஜப்பான் இலங்கைக்கு மின்சாரக் கார்களை ஏற்றுமதி செய்வதில்லை என்பதால்,வரி குறைப்பால் பாவனையாளர்களுக்கு நன்மை இல்லை என சுட்டிக் காட்டு

· · 496 Views

2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் மின்னியல் வாகனங்களுக்கான விலைகள் 10 லட்சம் ரூபாவினால் குறைக்கப்பட்டது. எனினும், இதன் நன்மை பாவனையாளருக்கு கிடைக்காது என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் செயலாளர் கீர்த்தி குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த கீர்த்தி குணவர்தன,

”மின்னியல் வாகனங்களைப் புதிதாக இறக்குமதி செய்வோருக்கு மாத்திரமே இந்த வரிகுறைப்பின் நன்மை கிட்டும். எனினும், இலங்கைக்கான உத்தியோகபூர்வ முகவர்களுக்கு மின்னியல் வாகனங்களை ஜப்பான் விற்பனை செய்வதில்லை. குறித்த வாகனத்திற்கான அடிப்படை வசதிகள் இலங்கையில் இன்மையால் குறித்த வாகனங்களை ஜப்பான் நிறுவனம் இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதில்லை. இதனால் குறித்த வாகனங்களுக்கான வரி குறைப்பை பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

 

 

 

எனினும், ஏனைய வாகனங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 750,000 ரூபா வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், வாகனங்களின் தரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.