ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார் தான்..ஆனால்..? ஒப்புக்கு சப்பாணியாக ஒரு நியூஸ் அவ்வளவுதான்

· · 369 Views

அகிலம் போற்றும் அண்ணல் நபியின் ஜனன தினம் இன்றாகும்.

 

 

 

உலகெங்கும் வாழும் முஸ்லிம் மக்கள் மகிழ்வுடன் இன்றைய தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

 

 

நாட்டில் பல்வேறு சமூக கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுகின்ற போதிலும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

இது சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதுடன், பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வௌிப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

அனைத்து சமூகங்களும் ஒரு தாய் மக்களைப் போன்று ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் முன்மாதிரியான தேசமாக சுபீட்சத்தை நோக்கிச் செல்வதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

இதேவேளை, நபிகள் நாயகத்தின் ஜனன தினமானது நாட்டில் நிலையான அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முஹம்மது நபி அவர்கள் காட்டிய வாழ்க்கை வழிமுறை எந்தளவு முக்கியமானது என்பதை தௌிவுபடுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.